"PONNIYIN SELVAN 2000 PAGE'னு சொன்னாங்க, அட போயா'னு விட்டுட்டேன், அப்புறமா ஜெயலலிதா தான்".. PS1 மேடையில் ரஜினி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் நாவல் தொடர்பாக சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய ரஜினி, "நான் பொதுவாக பக்கங்களை கணக்கு வைத்து தான் புத்தகம் படிப்பேன். பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்கள் 2000 பக்கங்கள் என்றார்கள். அப்போதே வேண்டாம் என சொல்லி விட்டேன்.

அதன் பின்னர் தான், 80 களில் ஒரு இதழில், பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று கேள்வி ஒன்றை ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், ரஜினிகாந்த் என பதிலளித்திருந்தார். இதை அறிந்ததும் குஷி ஆகி விட்டேன். அதன் பின்னர் தான் பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்தேன். கல்கி தற்போது இருந்திருந்தால் அவர் காலில் விழுந்திருப்பேன்" என ரஜினிகாந்த் நெகிழ்ந்து போய் குறிப்பிட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth about ponniyin selvan novel in ps1 audio launch

People looking for online information on Jayalalitha, Kamal Haasan, Ponniyin Selvan, PS1, PS1 Trailer, Rajinikanth will find this news story useful.