சிறுவயதில் இருந்து நடிகராக வேண்டும் என்று ஆசை கொண்டிருந்து அதற்கேற்ப நாயகனாகவும் அறிமுகமானவர் நடிகர் சரவணன். 1990 களில் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியிருந்த சரவணன், "பொண்டாட்டி ராஜ்ஜியம்", "தாய் மனசு" உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இதற்கிடையே சில ஆண்டுகள் எந்த படங்களிலும் தோன்றாமல் இருந்து வந்த சரவணன், கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அமீர் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக அறிமுகமாக இருந்தார். கார்த்தியின் முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த திரை உலகையும் திரும்பி பார்க்கவும் வைத்திருந்தது.
இந்த நிலையில் நடிகர் சரவணன் தற்போது Behindwoods நேயர்களுக்கு பிரத்தேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய சினிமா பயணங்கள் குறித்தும், தான் நடித்த கதாபாத்திரங்கள் குறித்தும் பேசி இருந்தார். குறிப்பாக பருத்தி வீரன் குறித்து பேசும்போது, “இந்த திரைப்படத்தில் கார்த்தியின் சித்தப்பா கதாபாத்திரத்தில் வரும் சரவணன் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது. பலரும் கூட இப்போது வரை "சித்தப்பு" என்றுதான் அழைத்தும் வருகின்றனர். அந்த அளவுக்கு சரவணனின் கதாபாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. பருத்திவீரன் ஹிட்டுக்கு பிறகு நிறைய படங்களில் தோன்றி இருந்தாலும், அந்த பெயர் மறையவில்லை.
ரஜினி சார் கூட ஒருமுறை சொன்னார். ‘சரவணன் நான் எவ்வளவோ படங்கள் பண்ணி கொஞ்சம் கொஞ்சமாக பதினாறு வயதிலே பரட்டை எனும் பெயரை கடந்து மக்கள் என்னை பார்த்தார்கள். ஆனால் நீங்கள் மாட்டிக்கொண்டுவிட்டீர்கள், ஏனென்றால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சித்தப்பா இருப்பார்கள்.’ என்று சொன்னார். அவர் சொன்னது உண்மை தான். பருத்தி வீரன் படம் வந்து இத்தனை வருஷங்கள் ஆகியும் அந்த கேரக்டரை மக்கள் மறக்கவில்லை” என்று கூறினார்.
Also Read | "பருத்திவீரன்-னால பணமும் வரல.. சந்தோஷமும் வரல" - உடைக்கும் Bigg Boss சரவணன்