தல அஜித் - இயக்குனர் சிவா கூட்டணி நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்தனர். சத்யஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.
ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்தார். இசையமைப்பாளர் டி.இமான் இசையில் கவிஞர்கள் தாமரை, விவேகா, யுக பாரதி, அருண் பாரதி பாடல்களை எழுதினர். 14 இசைக்கோர்வைகளை கொண்டதாக விஸ்வாசம் படத்தின் ஆல்பம் அமைந்தது. 2019 பொங்கலுக்கு ரிலீஸ் ஆன விஸ்வாசம் திரைப்படம், தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. பாகுபலிக்கு அடுத்து அதிக வசூல் செய்த திரைப்படமாக தமிழகத்தில் விஸ்வாசம் அமைந்தது. மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசியவிருதையும் இசையமைப்பாளர் டி. இமானுக்கு பெற்றுத்தந்தது.
விஸ்வாசம் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, கலை இயக்குனர் மிலன், இசையமைப்பாளர் இமான், எடிட்டர் ரூபன் மீண்டும் இணைந்த படம் 'அண்ணாத்த'. இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. தீபாவளியை முன்னிட்டு இந்த படம் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அண்ணாத்த படம் உருவான விதம் குறித்து ஒரு ஆடியோவை ரஜினிகாந்த் டிவிட்டர் வாயிலாக ஹூட்டில் பகிர்ந்துள்ளார். அதில் “விஸ்வாசம் படம் இவ்ளோ ஹிட் ஆறதுக்கு என்ன காரணம்னு பாக்க படத்த பார்த்தேன். படம் போக போக, க்ளைமேக்ஸ் வர வர, படத்தோட கலரே சேன்ஜ் ஆய்டுச்சு.. என்னையே அறியாம கை தட்டீட்டேன்.. சூப்பர் படம்!” என கூறியுள்ளார்.