நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான திரைப்படம் தளபதி.
இந்த படத்தின் ரஜினியின் தாயாராக வரும் ஸ்ரீவித்யா, தம் குழந்தையான ரஜினிகாந்த்தை குழந்தையாக இருக்கும்போதே ஓடும் ரயிலில் குழந்தையை தவறவிட்டுவிடுவார். அதாவது அந்த குழந்தை ரயில் வண்டியில் ஒரு கம்பார்ட்மெண்டிலேயே சென்றுவிடும். அந்த தாய் ஓடிவந்தும் குழந்தையை மீட்க முடியாது. காரணம் ரயில் வேகமாக சென்றுவிடும்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் சம்பவம், நிஜத்தில் பாதி நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் குல்லு தாத்ரி வனப்பகுதியில் உள்ள கங்கை ஆற்று கரையில் குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்துள்ளது. இந்த குரலை கவனித்த அங்கிருந்த தொழிலாளி ஒருவர் ஒரு மரப்பெட்டி ஆற்றில் மிதந்து வந்ததை கவனித்திருக்கிறார்.
உடனே பெட்டியை திறந்தவருக்கு காத்திருந்தது ஆச்சரியம். ஆம், பெட்டிக்குள் இருந்ததோ பச்சிளம் குழந்தை. அத்துடன் குழந்தையின் ஜாதகம், துர்க்கையம்மன் படம் உள்ளிட்டவை உடன் இருந்துள்ளதுடன், ‘கங்கையின் மகள்’ என்று எழுதப்பட்ட குறிப்புச் சீட்டும் இருந்துள்ளது. இதை அறிந்த போலீஸார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
ALSO READ: இந்த ஜோடி சேராதானு எத்தன பேர் நெனைச்சிருப்போம்! அது நடந்தாச்சு! நடிகரின் உருக்கமான பதிவு!