சென்னையின் பரபரப்பான ஸ்டூடியோ.. ரஜினி, ஷாருக் கான், SK படங்களின் ஷூட்டிங் இங்கதான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென் இந்திய அளவில் பல்வேறு துறைகளிலும் ஆதித்யாராம் குரூப்ஸ், தம் கால் தடத்தை வெற்றிகரமாக பதித்திருக்கிறது. அதில் ஒன்றுதான் ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டி. 

Advertising
>
Advertising

Also Read | "நடுராத்திரி சம்மர்சால்ட் அடிக்கவிட்டியே மன்னிக்கவேமாட்டேன்"-BIGGBOSS பிரபலம் பற்றி கார்த்தி!

ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டி மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் மூலமாக திரைத்துறையில் ஆதித்யாராம் குரூப்ஸ் சிறப்பாக செயலாற்றி வருகிறது. முன்னணி நடிகர்கள் பலர் நடித்த பல வெற்றி படங்களை இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அவ்வகையில் ECR- இல் இருக்கக்கூடிய ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில் தான் தற்போது பல முன்னணி நடிகர்களின் முக்கிய திரைப்படங்கள் படமாக்கப் பட்டு வருகின்றன.

குறிப்பாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்படுகின்றனர். அந்த வகையில், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில் நடக்கிறது. இதேபோல் ரஜினிகாந்த் நடிப்பிலான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.

இவற்றைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய திரைப்படம், சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ ஆகிய திரைப்படங்களும் ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "தனுஷ் நடித்த சிறந்த படங்களில் ஒன்று 'திருச்சிற்றம்பலம்'.." பிரபல தமிழ் இயக்குனரின் கருத்து!

தொடர்புடைய இணைப்புகள்

Rajini Shah Rukh Khan Sk movies shooting in Chennai Aditya Ram Studios

People looking for online information on Aditya Ram Studios, Rajinikanth, Shah Rukh Khan, Suriya will find this news story useful.