“ITS NOT EASY வெங்கட!”.. மாநாடு இயக்குநரை போன் பண்ணிய ரஜினி!! ‘பிரேம்ஜி’ பற்றி என்ன சொன்னார்? வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து திரையரங்கில் 2021, நவம்பர் 25-ஆம் தேதி நேரடியாக வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

சிம்புவுடன் இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், வாகை சந்திரசேகர், மனோஜ், உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் செலிபிரிட்டி ஷோவில் பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, மாநாடு திரைப்படம் குறித்து, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பாராட்டி கூறிய கருத்தையும் பதிவு செய்தார்.

“தலைவரிடம் இருந்து வந்த போன்கால் தான் எதிர்பாராத ஒரு கால். மிகவும் பாராட்டினார். இது எப்படி யோசிச்சீங்க? ரொம்ப கஷ்டமான ஒரு கான்செப்ட்.. இது புரியுற மாதிரி சொல்றது ரொம்ப கஷ்டம்.. its not easy வெங்கட்.. ரொம்ப நல்லா பண்ணிருக்கீங்க.. ஒரு சீன் கூட எனக்கு தொய்வா தெரியலனு சொன்னார்” என்று வெங்கட் பிரபு கூறினார்.

அப்போது இடைமறித்த, பிரேம்ஜி, “என்ன பத்தி என்ன சொன்னார்?” என்று கேட்டதும், அதற்கும் ஜாலியாக பதில் கூறிய வெங்கட் பிரபு, “பிரேம்ஜி.. வேற லெவல்ல நடிச்சிருக்கார்.....” என்று கூறினார் என்று fun ஆக கூறுகிறார். மாநாடு திரைப்படத்துக்கு ரஜினியின் இந்த பாராட்டு சிம்பு ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

“ITS NOT EASY வெங்கட!”.. மாநாடு இயக்குநரை போன் பண்ணிய ரஜினி!! ‘பிரேம்ஜி’ பற்றி என்ன சொன்னார்? வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rajini appreciated maanaadu in call venkat prabhu opens up video

People looking for online information on Maanaadu, Premgi Amaren, Rajinikanth, Silambarasan TR, Sj suryah, Venkat Prabhu will find this news story useful.