"நலம் பெற வேண்டும்"!.. கமல் உடல்நிலை கேட்டறிந்த ரஜினி.. பிரபலங்கள் நம்பிக்கை வார்த்தை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை போரூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் செண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertising
>
Advertising

இதுகுறித்து தம்முடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்த கமல்ஹாசன், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.”என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது வெளியாகியுள்ள SRMC மருத்துவமனை அறிக்கையில், “சுவாச பாதை தொற்று & காய்ச்சல் (lower respiratory tract infection) காரணமாக SRMC-யில் நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு இருக்கிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நடிகர் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து நடிகரும், நடிகர் கமல்ஹாசனின் நண்பருமான ரஜினிகாந்த் போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

இதனிடையே, “திரு. கமல்ஹாசன் அவர்கள் பூரண குணம் பெற்று, நலமுடன் விரைவாக வீடு திரும்ப வேண்டும்” என்று இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், லோகேஷ் கனகராஜ், அட்லீ, ராஜேஷ், நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, ஆர்.சரத்குமார், சந்தானபாரதி, ராதாரவி, பகத் பாசில்,  சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், விஜய்டிவி குட்டி, ராம்குமார் – சிவாஜி பிலிம்ஸ், விக்ரம் பிரபு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் சமூக பிரபலங்கள் ஏ.சி.சண்முகம், சைதை துரைசாமி, ஞானசம்பந்தன் ஆகியோர் வாழ்த்தியுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்து வருகிறார். இதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rajini and film people wishing kamal to get well from hospital

People looking for online information on Kamal Haasan, Kamal Hassan Health, Rajinikanth, SRMC will find this news story useful.