Behindwoods Gold Icons டிஜிட்டல், டெலிவிஷன், சோஷியல் மீடியா விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய கிரிக்கெட் வீரரும் சின்ன தலயுமான சுரேஷ் ரெய்னாவுக்கு THE GOLDEN GLOBAL ICON OF INSPIRATION - SPORTS விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த விருதினை ரெய்னாவுக்கு வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்வில் சின்ன தல ரெய்னா, முன்பே வா பாடலை பாடி அசத்தியதுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு அந்த பாட்டுக்கே உரிய ஐகானிக் ஸ்டெபினை போட்டு ரசிகர்களை அசரவைத்தார்.
இப்படி பாட்டு, டான்ஸுடன் நிறுத்தவில்லை நம்ம சின்ன தல ரெய்னா. மா.கா.பா மற்றும் பிரியங்கா போட்ட பவுலிங்களுக்கு பந்தை அடித்து தெறிக்க விட்டார். அந்த பந்துகள் ரசிகர்களிடையே செல்ல, அவற்றை ரசிகர்கள் கேட்ச் பிடிக்க முயற்சித்தனர். அதில் ஒரு பந்தை ராஜா ராணி-2 சீரியலின் ஹீரோ சித்து கேட்ச் பிடித்துவிட்டார். இதுபற்றி தமது இன்ஸ்டாகிராமில் சித்து, ‘அவுட்.. யாருகிட்ட’ என குறிப்பிட்டு Funஆக பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் இயங்கும் பல பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த விருது விழாவில் சித்து உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ALSO READ: Swim Suit-ல் கலக்கும் டிடி.. "மத்தவங்க என்ன சொல்வாங்களோன்னு யோசிச்சேன்.. ஆனா" .. வீடியோ!