இயக்குநர் ராஜமௌளி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக கொண்டாடப்படுபவர் எஸ்.எஸ்.ராஜமௌளி. இவர் இயக்கிய மகதீரா, நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தற்போது சாம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் RRR என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தனது இத்திரைப்படத்தில் இருந்து புதிய வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படப்பிடிப்பில் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து, எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பில் விரைவில் நடிகை ஆல்யா பட் இணைகிறார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் தமிழில் இரத்தம் ரனம் ரௌத்திரம் என்ற பெயரில் வெளியாகவுள்ளது.