ஜப்பானில் ராஜமௌலி - ராம் சரண் - JR NTR.. மாஸ் காட்டப்போகும் RRR! ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR திரைப்படம் ஜப்பானில் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | முழு டபுள் ஆக்சன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன மாஸான பதில்!

RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.

இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.

ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு.

RRR படம் 1100 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூலாக ஈட்டியது. இந்த RRR படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி ஒடிடி உரிமையை ஜி5 கைப்பற்றியது. ஹிந்தி மொழி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. அதேபோல் ஆங்கிலம், போர்த்துகீசிய, துருக்கிய, ஸ்பானிய, கொரிய மொழிகளின் ஒடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது ஜப்பான் நாட்டில் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகளில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஜப்பானுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. நாளை அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐமாக்ஸ் 3டியிலும் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "நம்ம எப்போ ஷூட்டிங் போலாம்".‌. வெங்கட் பிரபு கேள்விக்கு SK அளித்த சூப்பர் பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

Rajamouli Jr NTR Ram Charan RRR Movie Releasing in Japan

People looking for online information on Japan, Jr ntr, Ram Charan, RRR Movie, S S Rajamouli will find this news story useful.