விலையுயர்ந்த கார் வாங்கிய பிரபல ராஜா ராணி நடிகை... யாருனு பாருங்க... வாழ்த்தும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி என்றாலே சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தான் பிரசித்தம். பல நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. அப்படி நடிகை ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் இணைந்து நடித்த நாடகம் ராஜா ராணி. அந்த சீரியல் வெற்றி பெற்றதையடுத்து அதே பெயரில் இரண்டாம் பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ஆல்யா மானசா உடன் கலர்ஸ் சேனலில் திருமணம் சீரியல் மூலம் பிரபலமடைந்த சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது ராஜா ராணி 2. அதே போல் இதன் ஒளிபரப்பு நேரமும் ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது.

இந்த சீரியல் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற "என் கணவன் என் தோழன்" என்ற சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இதில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இந்நிலையில் சீரியலில் அவரது தம்பிக்கு மனைவியாக அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் நிஜப் பெயரும் அர்ச்சனா தான். அவர் ஒரு பிரபல தொகுப்பாளினி யாவர்.  இந்நிலையில் சமீபத்தில் புதிதாக கார் வாங்கியது பற்றி அவர் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "எனது வாழ்க்கையின் மிகப்பெரிய ஸ்டெப். எனது குடும்பத்திற்கு புதிய உறுப்பினரை வரவேற்கிறோம்" என்று கார் வாங்கிய மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

Tags : Raaja rani

Raja rani serial actress welcome new car கார் வாங்கிய ராஜா ராணி நடிகை

People looking for online information on Raaja rani will find this news story useful.