செம்ம.. தனுஷ் படத்தில் இணைந்த ராஜா ராணி 2 சீரியல் நடிகை.. எந்த படம் தெரியுமா? வைரல் BTS ஃபோட்டோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

raja rani serial actress joins dhanush vaathi movie
Advertising
>
Advertising

தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ், சம்யுக்தா மேனன் மற்றும் பலரது நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் வாத்தி. நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வருகிறது.  தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G.V.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் ராஜா ராணி சீரியலில் நாயகனின் அம்மாவாக நடிக்கும் பிரவீனா இணைந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஒரு கூட்டுக் குடும்பத்துக்குள் நடக்கும் டிராமாவை மையமாக வைத்து விஜய் டிவியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த சீரியலின் 2-ஆம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நாயகன் சரவணின் அம்மாவாக சிவகாமி எனும் கேரக்டரில் பிரவீனா நடிக்கிறார்.

இந்நிலையில் வாத்தி படத்தில் தனுஷூடன் இணைந்து நடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை பிரவீனா தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வலம் வருகிறது. அந்த ஃபோட்டோவில் வாத்தி கெட்டப்பில் இருக்கும் நடிகர் தனுஷூடன் பிரவீனா நிற்பதை காண முடிகிறது. இதனை தொடர்ந்து பிரவீனாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Tags : Dhanush, Vaathi

தொடர்புடைய இணைப்புகள்

Raja rani serial actress joins dhanush vaathi movie

People looking for online information on Dhanush, Vaathi will find this news story useful.