அம்மாவாகிறார் விஜய் டிவி சீரியல் நடிகை ஆல்யா மானசா!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியான ஆல்யா மானசா, சஞ்சீவ் கார்த்திக் ஜோடிக்கு சமீபத்தில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்து.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலில் செம்பா-கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கணவன், மனைவியாக நடித்து மிகவும் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இந்த சீரியலில் நடிக்கும் போது காதலில் விழுந்த இவர்கள் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில், இருவரும் மோதிரம் மாற்றி மாலை அணிவித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசாவிற்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் பரவிய நிலையில், சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு எளிமையான முறையில் 2 மாதங்களுக்கு முன்பே திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக அறிவித்தார்.

இந்நிலையிக் சமீபத்தில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சியில் நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர். பொது மேடையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக  இருப்பதாக அறிவித்தார்.

Raja Rani Fame Alya Manasa and Sanjeev Karthick are expecting their first child

People looking for online information on Alya Manasa, Raja Rani, Sanjeev Karthick, Vijay tv will find this news story useful.