'RAJA RANI' ஆல்யா மானசா வீட்டுக்கு புதுவரவு .. வைரலாகும் குழந்தையின் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜா ராணி சீரியல் புகழ் கார்த்திக் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

Advertising
>
Advertising

நிஜ ஜோடியான ரீல் ஜோடி….

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்கள் நடிகை ஆல்யா மானசா மற்றும் நடிகர் சஞ்சீவ். இந்த சீரியலின் போது காதல் வயப்பட்ட இருவரும் பின்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த சின்னத்திரை ரியல் ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு ஆல்யா மானசா பிறகு ராஜா ராணி இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் மீண்டும் விஜய் டிவியின் ராஜா ராணி 2 என்ற சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

முதல் குழந்தை…

சஞ்சீவ்- ஆல்யா மானசா தம்பதிகளுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை அப்போது தம்பதிகள் வெளியிட அது வைரலானது. தனது மகளுக்கு அய்லா என்று பெயர் வைத்துள்ளனர். ஆல்யா மானசா குழந்தையின் அழகான புகைப்படம் மற்றும் போட்டோக்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அதிலும் பார்க்க அச்சுஅசலாக ஆல்யா மானசா போலவே குழந்தையும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பில் பிஸியான தம்பதிகள்…

நடிகர் சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றின் மொழி' சீரியலிலும், நடிகை ஆல்யா மானசா 'ராஜா ராணி 2' சீரியலிலும் பிசியாக நடித்து வந்தனர். இதற்கிடையே ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இதை அறிவித்த போது ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்தனர். தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த அவர் சமீபத்தில் பிரசவத்துக்காக அந்த தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகை ரியா இப்போது அந்த தொடரின் சந்தியா வேடத்தில் நடித்து வருகிறார்.

பிரசவமும் வைரலாகும் புகைப்படமும்

இதையடுத்து இப்போது ஆல்யா மானசாவுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதை சமூகவலைதளத்தின் மூலம்  அறிவித்துள்ளனர். மேலும் குழந்தையோடு சஞ்சீவ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தோடு ‘தாயும் சேயும் நலமாக இருப்பதாக’ அறிவித்துள்ளனர். பிறந்துள்ள குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் இந்த தமபதியினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Raja Rani Alya manasa gives birth to boy baby

People looking for online information on Alya Manasa, Raja Rani 2, Sanjeev Karthik will find this news story useful.