விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. விஜய் டிவியில் தினமும் இரவு 9:30 மணிக்கு இந்த ராஜா ராணி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
முன்னதாக இந்த சீரியலின் முதல் பாகத்தில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் நடித்து வந்தனர். இந்த சீசனின் முதல் பாகம் வெற்றி பெற்று ரசிகர்களுடைய பேராதரவை குவித்தது. இதனை தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் குடும்பத்தின் பாரம்பரியத்தை தொடர்ந்து நடத்தவும், அதை பாதுகாக்கவும் முனைகிறார் மூத்த கதாபாத்திரமான சிவகாமி.
அவருடைய மகன்கள், மகள்கள், மருமகள்கள் அனைவரையும் சேர்த்து ஒரு குடும்பமாக கட்டிக் காத்து, கட்டுக்கோப்பாக வாழ நினைக்கிறார். ஆனால் குடும்பத்துக்குள் தொடர்ச்சியாக உருவாகும் சிக்கல்களும் அதிலிருந்து குடும்பத்தினருக்கு கிடைக்கும் அனுபவங்களும் அவ்வப்போது குடும்பத்தில் நிகழும் இன்ப துன்பங்களும் இந்த சீரியலில் தொடர் கதையாக காட்டப்பட்டு வருகிறது. இதில் நாயகனாக சரவணன், நாயகியாக சந்தியா ஆகிய கதாபாத்திரங்களில் முறையை வி ஜே சித்து மற்றும் ரியா நடித்து வருகின்றனர். இதற்கு முன்பு வரை ஆல்யா மானசா சந்தியாவின் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அதன் பிறகு ரியா இந்த கதை பாத்திரத்தை Replace செய்தார்.
இதனை தொடர்ந்து செந்திலின் மனைவி அர்ச்சனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே அர்ச்சனா தற்போது மாற்றப்பட்டிருக்கிறார். இவருக்கு பதில் இந்த சீரியலில் புதிய அர்ச்சனாவாக பிரபல நடிகை அர்ச்சனா நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
அர்ச்சனா என்னும் பெயரில் இந்த கதாபாத்திரம் இருந்து வரும் நிலையில் ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே அர்ச்சனாவை தற்போது புதிய பிரபல விஜய் டிவி நடிகை அர்ச்சனா Replace செய்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகிய பின்பு, இதற்கு முன்பு வரை அர்ச்சனாவாக நடித்து வந்த விஜே அர்ச்சனா தம் வலைப்பக்கத்தில் தகவல் தெரிவித்ததுடன் ரசிகர்களுக்கும் நன்றியும் தெரிவித்திருக்கிறார்.
அதில், “வணக்கம் மக்களே. நீங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு பை உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனது அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கை என்ன திட்டமிட்டுள்ளது என்பதை காண இது எனது நேரம் என்று நினைக்கிறேன்.
ஆம், நான் ராஜா ராணி 2-ஐ மிஸ் செய்வேன், அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பயணம் முழுவதும் உங்கள் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்றுவரை நீங்கள் எனக்கு அளித்து வரும் உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. ரசிகர்கள் அனைவரின் அன்புடனும் ஆதரவுடனும் எனது அடுத்த புதிய முயற்சியில் மீண்டும் சந்திப்போம் என்று நம்புகிறேன். அதுவரை, லவ் யூ ஆல்” என அர்ச்சனா குறிப்பிட்டுள்ளார்.