ஒரு கூட்டுக் குடும்பத்துக்குள் நடக்கும் டிராமாவை மையமாக வைத்து தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடர் விஜய் டிவியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த சீரியலின் 2-ஆம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
![raja rani 2 twust in archana babay shower function promo raja rani 2 twust in archana babay shower function promo](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/raja-rani-2-twust-in-archana-babay-shower-function-promo-new-home-mob-index.jpg)
இதில் தற்போது அர்ச்சனாவுக்கு வளைகாப்பு விழா நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு அர்ச்சனாவுக்கு சடங்குகளை செய்கின்றனர். அப்போது ஜெசி திடீரென மயங்கி விழுந்துவிட அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.
ஆனால் அங்கிருந்த சரவணனின் பாட்டி, ஜெசியின் கையை பிடித்து பார்த்து, “உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என்கிறார். அதற்கு ஜெசி இல்லை என சொல்ல, “பிறகு எப்படி கர்ப்பமாக இருக்கிறாய்?” என பாட்டி கேட்டுவிட, உடனே சந்தியாவின் மாமியாருக்கு கோபம் வந்து ஜெசியை வீட்டை விட்டு விரட்ட முயல்கிறார்.
அப்போது ஜெசியோ, “உங்கள் மகன் ஆதிதான் என் கர்ப்பத்துக்கு காரணம் என்கிற உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது” என கூறி அனைவரையும் அதிரவைக்கிறார். இதுநாள் வரை ராஜா ராணி குடும்பத்தில் செந்தில், அர்ச்சனா, ஆதி, பார்வதி என ஒவ்வொருவராக தவறுகளை செய்ய, சந்தியா ஒவ்வொருவரின் தவறையும் பொறுத்துக் கொண்டு அவர்களை திருத்துவார்.
ஆனால், இந்த விஷயம் சரவணனின் அம்மா மிகவும் நம்பிய ஆதி மீது அவருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்த போகிறது என்பதால், பூதாகரமான பிரச்சனையாக ராஜா ராணி சீரியலில் அடுத்து இந்த விவகாரம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனை சந்தியா எப்படி ஹேண்டில் செய்யப் போகிறார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.