Vijay Television, Raja Rani 2, 08, பிப்ரவரி 2022:- விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் பெரும் சண்டை வெடித்து மிகவும் சென்சேஷனலான எபிசோடு ஒளிபரப்பாகி வருகிறது.

ராஜா ராணி 2
கடந்த வாரங்களில் அர்ச்சனாவும் செந்திலும், அர்ச்சனாவின் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என பொய் சொல்லிவிட்டு குற்றாலம் லாட்ஜில் தங்கி, போலீஸாரின் சந்தேக கேஸில் மாட்டியிருந்தபோது சரவணனால் காப்பாற்றப்பட்டு வீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
சிவகாமி மீது ஏற்கனவே கொடுத்த புகார்
இதனிடையே காவல்துறையினரால் குடும்ப வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்டிருந்த முன்னனுபவத்தினால், சிவகாமி போலீஸாரை வெறுத்திருந்தார். அந்த புகாரை நாயகி சந்தியா தான் கொடுத்திருந்ததாக அந்த குடும்பமே நினைத்துக் கொண்டிருந்தது. இதை பற்றி போலீஸாரிடம் சந்தியா உதவி கேட்டிருந்தார்.
சிக்கிய அர்ச்சனா, செந்தில்
அந்த போலீஸார் தற்போது வீட்டுக்கு வந்து குடும்பத்தினர் மத்தியில், அர்ச்சனாவின் தங்கை மூலம் அர்ச்சனா தான் ஆன்லைனில் அந்த புகாரை ஆங்கிலத்தில் மெயில் அனுப்பியிருக்கிறார் என்று கூறிவிட்டார். பின்னர் அர்ச்சனாவும் அவரது கணவர் செந்திலும் அவர்களின் ரூமில் இருந்து வெளியே வர, அனைவரும் அர்ச்சனாவிடம் விசாரித்தனர்.
அர்ச்சனாவின் கம்பி கட்டுற கதை..
அர்ச்சனாவோ தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என கம்பி கட்டும் கதையெல்லாம் சொல்ல, சிவகாமி செந்திலிடம் சத்தியம் பண்ண சொல்லி கேட்க, அப்போது பொய் சொல்லிவிட்டு குற்றாலம் போய் உல்லாசமாக இருந்ததை செந்தில் ஒப்புக்கொள்ள அதே சமயம் போலீஸில் புகார் கொடுத்த விஷயம் என்பது என்ன? அது பற்றி தனக்கு தெரியாது என செந்தில் கூறுகிறார்.
அண்ணன் - தம்பி இடையே அடிதடி..
இதை கேட்டதும் கோபம் வந்து சரவணன் செந்திலை தள்ளிக்கொண்டு போய் அடி அடி என அடித்துவிட்டார். அதன் பின்னும் தனக்கு ஒன்றுமே புரியவில்லை என செந்தில் கூற, மீண்டும் கோபம் வந்து செந்திலை சரவணன் அடிக்க, சரவணன் செந்திலை திரும்பி அடிக்க இருவரையும் சிவகாமி விலக்கிவிட்டார். முன்பாகவே செந்திலை அப்பாவே அடித்துவிட்டார்.
அர்ச்சனாவை அடிக்க பாய்ந்த சரவணன்
பின்னர் அர்ச்சனாவின் தங்கை ப்ரியா தான் புகார் கொடுத்தார் என அம்மா சிவகாமி சொல்ல மனைவியிடம் செந்தில் அனைவர் முன்னிலையிலும் விசாரிக்கிறார். அப்போது மொத்த பழியையும் தூக்கி அர்ச்சனா சந்தியா மேல் போட எதற்கெடுத்தாலும் சந்தியா மீது பழிபோட்டுக் கொண்டிருந்ததால் இம்முறை பெருங்கோபம் வந்து கையில் கிடைத்ததை எடுத்துகொண்டு அர்ச்சனாவையும் அடிக்க ஓடிவிட்டார் சரவணன்.
சென்சேஷனல் எபிசோடு
இப்படி அர்ச்சனாவின் பொய், பித்தலாட்டங்கள் இந்த குடும்பத்தில் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்த எபிசோடின் தொடக்கம் முதல் முடிவு வரை