RAJA RANI 2 : விலகிய ரியா – புது சந்தியாவாக பிரபல ஜீ தமிழ் சீரியல் ஹீரோயின் மாஸ் எண்ட்ரி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மெகா ஹிட் ஆன சீரியல் 'ராஜா ராணி'. இந்த தொடரின் முதல் பாகத்தில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் நடித்திருந்தனர். செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும் சின்னைய்யா கதாபாத்திரத்தில் சஞ்சீவும் நடித்திருந்த சூழலில் மக்கள் மத்தியில் இவர்கள் இருவரும் பிரபலமாக காரணமாகவும் இந்த தொடர் அமைந்திருந்தது.

Advertising
>
Advertising

Image Credit : vijay television

Also Read | "எமோஷனலா டச் பண்ணுச்சு.!" - கவின் நடித்த ‘டாடா’ படத்த பத்தி நடிகர் லாரான்ஸ் நெகிழ்ச்சி..

அதேபோல இந்த தொடருக்கு மத்தியில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.

ராஜா ராணி தொடரின் முதல் பாகம் வெற்றி பெற்றதன் காரணமாக இரண்டாவது பாகமும் ஆரம்பமாகி தற்போது அசத்தலான வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆல்யா, 2 ஆவது முறையாக கர்ப்பம் அடைந்ததன் காரணமாக தொடரில் இருந்தும் விலகி இருந்தார். ராஜா ராணி 2 தொடரில் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் வரும் சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வந்தார்.

Image Credit : vijay television

இதனிடையே, கர்ப்பம் அடைந்ததன் காரணமாக ஆல்யா விலகவே சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்ற நடிகையும் நடித்து வந்தார். போலீஸ் அதிகாரி கனவுடன் வலம் வந்த ரியா, கடைசியில் உயர் அதிகாரி ஆன சூழலில், அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சிகள் என விறுவிறுப்புடனும் இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது ஒரு பரபர தகவலை நடிகை ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Image Credit : vijay television

அந்த வீடியோவில் பேசிய ரியா, "ராஜா ராணி 2 தொடரில் நான் நடிக்க ஆரம்பித்து ஒரு வருடங்கள் ஆக போகிறது. இந்த வருடத்தில் நான் எந்த வீடியோவும் போடவில்லை. அதனால் இப்போது போடுகிறேன். ஏனென்றால் நான் இனி ராஜா ராணி 2 தொடரில் இல்லை. இனி நான் சந்தியா இல்லை, சந்தியாவாக வேறு ஒருவர் நடிக்கப் போகிறார். அவர்களுக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்" எனக்கூறி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரியா பகிர்ந்துள்ளார்.

Image Credit : vijay television

இந்த நிலையில் இந்த சீரியலில் தற்போது புதிய சந்தியாவாக நடிக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்து வந்தது. அவற்றுக்கு பதில் கிடைக்கும் வகையில் தற்போது இந்த சீரியலில் புதிய சந்தியாவாக நடிகை ஆஷா கௌடா இடம்பெறக்கூடிய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளன. இந்த எபிசோடும் ஒளிபரப்பாகிறது.

Image Credit : vijay television

நடிகை ஆஷா கௌடா, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை என்கிற சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | “ஞானவேல் ராஜா - சிவா - சூர்யா 3 பேரும் டெட்லி COMBO”.. Suriya42 குறித்து தனஞ்செயன்.!

தொடர்புடைய இணைப்புகள்

Raja Rani 2 new Sandhya Asha Gowda replaced Riya

People looking for online information on Asha Gowda, Raja Rani 2, Riya, Sandhya will find this news story useful.