விஜய் டிவி, 10, பிப்ரவரி 2022:- விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலில் விறுவிறுப்பான எபிசோடுகள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வருகின்றன.

ராஜா ராணி 2
நீண்ட நாட்களாகவே, அர்ச்சனா மற்றும் அவரது கணவர் செந்தில் இருவரும் சேர்ந்தும், அர்ச்சனா மற்றும் தனியாகவும் செய்துவந்த தவறுகள் எல்லாம் தற்போது ஒவ்வொன்றாய் அம்பலமானதை அடுத்து, தற்போது ராஜா ராணி குடும்பத்தினரிடையே பெரும் சண்டையே வெடித்துள்ளது.
Also Read: போடு சக்க.. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்துக்காக வைரல் ஆகும் #வடிவேலு-வின் புதிய கெட்டப்..
அர்ச்சனா - செந்தில்
அதன்படி, அர்ச்சனா தான், சரவணன் மற்றும் செந்திலின் அம்மா சிவகாமியை பற்றி போலீஸாரிடத்தில் புகார் கூறியதாக விஷயம் தெரியவர, குடும்பத்தினர் அனைவரும் அர்ச்சனாவையும் செந்திலையும் திட்டு திட்டு என திட்ட, ஆனாலும் வழக்கம் போலவே, நாயகி சந்தியா மீது அர்ச்சனா பழிபோட பார்த்தார். ஆனால், இந்த விவகாரத்தை போலீஸாரிடம் கேட்டு கண்டுபிடித்ததே சந்தியா தான் என்றபோதிலும் அர்ச்சனா செய்த இன்னும் பல தவறுகளை சந்தியா மறைத்துள்ளார்.
அடிக்க பாய்ந்த சரவணன்
இதேபோல் சரவணனும் அர்ச்சனா - செந்தில் லாட்ஜில் இருந்து போலீஸில் சிக்கியதை சந்தியா உட்பட மொத்த குடும்பத்தாரிடம் இருந்து மறைத்தார். இதனிடையே சரவணன் செந்திலை அடித்துவிட, தன் மனைவி சந்தியா மீது பழிபோட்டதற்காக அர்ச்சனாவையும் சரவணன் அடிக்க பாய்ந்துவிட்டார். ஆனால் இறுதியில் அர்ச்சனா கர்ப்பம் என்று தெரியவந்தது. இதனால் அர்ச்சனா அழுது அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்க, கர்ப்பிணி என்பதால் அனைவரும் அவரை வீட்டுக்குள் சேர்த்தனர்.
அர்ச்சனாவின் பழிவாங்கும் சபதம்..
அதே சமயம் குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என்று அர்ச்சனாவுக்கு அவரது கணவர் செந்தில் நிபந்தனை போட, தனிமையில் அர்ச்சனாவோ, தன்னை அனைவர் முன்னிலையும் அசிங்கப்பட வைத்த அர்ச்சனாவை வீட்டை விட்டு அனுப்ப போவதாகவும், அது தன் வயிற்றில் வளரும் குழந்தை மீது சத்திய என்றும் அடித்து சபதம் எடுத்துள்ளார்.