RAJA RANI 2: "ராஜா ராணி" சீரியலில் மாற்றப்பட்ட அர்ச்சனா கேரக்டர்.. புது அர்ச்சனா இவங்கதான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல், பல ரசிகர்களின் பேராதருடன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.

raja rani 2 actress archana changed new actress details
Advertising
>
Advertising

இந்த சீரியலின் முதல் பாகம் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் நடித்து வெற்றி பெற்றதை அடுத்து இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கினர். இதனை தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாவது பாகம் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கதாநாயகனாக விஜே சித்து சித் நடிக்கிறார். இதில் நாயகியாக ஆல்யா மானசா நடித்து வந்த நிலையில் பின்னர் ரியா, சந்தியா என்னும் நாயகி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தொடங்கினார்.

raja rani 2 actress archana changed new actress details

இதனை தொடர்ந்து இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில் இந்த குடும்பத்தின் மாமியாரான சிவகாமி இந்த குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.ஆனால் இதில் இந்த குடும்பம் அவ்வப்போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் தான் இந்த சீரியலின் தொடர்ச்சியான கதையாக சென்று கொண்டிருக்கிறது.

இதில் சிவகாமியின் மருமகள் அர்ச்சனா எனும் கதாபாத்திரத்தில், அதாவது செந்திலின் மனைவி கதாபாத்திரத்தில் விஜே அர்ச்சனா நடித்து வந்திருந்தார். அவ்வப்போது வில்லத் தனத்தை இந்த கதாபாத்திரம் செய்து கொண்டு வரும் நிலையில், அண்மையில் இந்த கதாபாத்திரத்திற்கு வளைகாப்பு நடந்தது. இந்த நிலையில் தான் விஜே அர்ச்சனா திடீரென மாற்றப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதில் புதிய நடிகை இந்த கேரக்டரில் நடிக்க வருகிறார்.

அவர் வேறு யாரும் அல்ல.. அவரும் நடிகை அர்ச்சனா தான். இந்த கதாபாத்திரமும் அர்ச்சனா என்னும் பெயரிலேயே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதில் பழைய அர்ச்சனாவை புதிய அர்ச்சனா Replace செய்கிறார். இது தொடர்பாக தம்முடைய சமூக வலைப்பக்கத்தில் இந்த சீரியலில் புதிதாக நடிக்கவிருக்கும் நடிகை அர்ச்சனா அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுருக்கிறார்.

Raja rani 2 actress archana changed new actress details

People looking for online information on Raja rani 2 archana changed, Raja Rani 2 Promo Today, Raja Rani 2 Serial today, Raja Rani 2 Serial today episode, Raja Rani 2 today Promo will find this news story useful.