உலகமே கொரோனா அச்சுறுத்தலில் முடங்கிக் கிடக்க, இந்தியாவில் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் இந்த மாத இறுதியில் முடியும் என்று நம்பப்பட்ட நிலையில், மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபலங்கள் பலரும் அடுத்து என்ன செய்வது என்று திட்டமிட்டு வருகிறார்கள்.
பெங்களூருவை பூர்விகமாக கொண்ட ரைசா வில்சன் பிக் பாஸ் சீஸன் 1-இல் பங்குபெற்றார். இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் ஹைதராபாத் இண்டர்நேஷனல் கன்வென்ஷன் செண்டர் ஃபெமினா மிஸ் செளத் ப்யூட்டிஃபுல் ஸ்மைல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார் ரைசா.
ஸ்போர்ட்ஸ் மற்றும் சினிமாவில் ஆர்வம் உள்ளவர் ரைசா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் வெற்றி பெற்று அவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ரைசா சமீபத்தில் எழுதியிருந்த பதிவு கவனிக்கத்தக்கது. அவரது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறினார்.
''கொரோனா காலகட்டத்தில் சுற்றியுள்ள விஷயங்களை தெரிந்து கொள்ள நினைத்தேன். கிட்டத்தட்ட எல்லா ந்யூஸ் சானல்களையும் பார்க்கிறேன். ஆனால் அவை எல்லாமே பெரும்பாலும் கெட்ட செய்திகள் தான் என்பதை உணரத் தொடங்கினேன்.
இதை பேலன்ஸ் செய்ய ஏன் நல்ல மற்றும் கெட்ட செய்திகளை சமமாகப் போடக் கூடாது?’' இவ்வாறு ரெய்ஸா கேள்வி எழுப்பியுள்ளார்