பிரபல மாடலாக இருந்த ரைஸா வில்சன், தமிழ் பிக்பாஸ் முதல் சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானார். பிக் பாஸில் முதலில் ரசிகர்கள் அவரை விமர்சித்தாலும் பின்னர் அவரது க்யூட் நடவடிக்கைகளால் ஏற்றுக் கொண்டார்கள்.

அதன்பின் ரைஸா ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்த 'பியார் பிரேமா காதல்' என்ற படம் சூப்பர் ஹிட் அடித்தது. ரசிகர்களிடையே அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. சமீபத்தில் வெளியான 'தனுசு ராசி நேயர்களே' என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து 'எஃப்ஐஆர்', ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து 'காதலிக்க யாருமில்லை' போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரைஸா. இந்நிலையில் ரைஸா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது, ‘நான் இப்ப மறுபடியும் ஷூட்டிங் போக ஆசைப்படறேன். ஆனா அது எல்லாருக்கும் பாதுகாப்பா இருக்கணும்னு நினைக்கறேன். கொரோனான்னா என்ன? அந்த வைரஸ் தானாவே வந்திருக்க இல்ல, யாராவது வேணும்னே பரப்பி விட்டாங்களா? இத பத்தின உண்மை எல்லாத்தையும் நாம தெரிஞ்சிக்கிட்டோமா? இந்த பிரச்சனையிலேர்ந்து எப்படி மீண்டு வரப் போறோம்? அதுக்கு இன்னும் என்னல்லாம் செய்யணுமோ? என்று ஆதங்கத்துடன் பதிவிட்டிருந்தார் ரைஸா.
ரைஸாவின் இந்தக் கேள்வி வைரலாகி வருகிறது