"மாஸூ மரணம்".. அப்படியே ‘ரஜினியின்’ ஸ்டைல்ல ஸ்டெப்.. ராஜூவும் பிரியங்காவும் செஞ்ச அலப்பறைகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் ராஜூவும் பிரியங்காவும், ரஜினி ஸ்டைலில் நடனம் ஆடியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்குள் 18 போட்டியாளர்கள் முதல்நாள் இணைந்தனர்.

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் தலைவராக தாமரைச்செல்வி இருக்கிறார். முன்னதாக 18 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறி விட்டார் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன், தம் தரப்பில் இருந்து ஒரு விளக்கம் தெரிவித்து நமீதா மாரிமுத்துவுக்கு வாழ்த்து கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடனேயே ஒரு பாடலை போட்டு, அந்த பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். இப்படித்தான் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்குள் விடிகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11-வது நாளில், பிக்பாஸ் வீட்டுக்குள் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்திலிருந்து, ‘மரணம்.. மாஸ் மரணம்’ என்கிற பாடல் ஒலிபரப்பானது.

அனிருத் ரவிச்சந்திர் இசையமைத்த இந்தப் பாடலைக் கேட்டதுமே பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் எழுந்து துள்ளலாக டான்ஸ் ஆடத் தொடங்கிவிட்டனர். அப்போது ராஜு, ரஜினி ஸ்டைலில் ஸ்டெப்ஸ்களைப் போட்டு அசத்தினார். இதேபோல் அங்கு எதிர்பாராத விதமாக விருவிருவென ரஜினி மாதிரியே நடந்து வந்த பிரியங்கா தனது பங்குக்கும் ரஜினி ஸ்டைலில் நடனமாடி அசத்தினார்.

அண்மையில்தான் பிரியங்கா, தன்னுடைய கதையை பிக்பாஸ் வீட்டுக்குள் கூறியிருந்தார். இதேபோல் ராஜூ, விஜய் டிவி சீரியல்களில் நடிகராக இருந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தவர்.

லைக் போடுவது டிஸ்லைக் செய்வது உள்ளிட்ட விவகாரங்களில் ராஜூ நிறையவே பேசப்பட்டவர். இந்த நிலையில் ராஜூவும், பிரியங்காவும் ரஜினி ஸ்டைலில், அப்படியே ரஜினியின் பாடி லாங்குவேஜை உள்வாங்கி நடனமாடி அசத்தி இருக்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Raini style dance raju and priyanka biggbosstamil5

People looking for online information on Darbar, Priyanka Deshpande, Rajinikanth, Raju jeyamohan will find this news story useful.