VIDEO: ரெய்னா!.. மாஸ்டர் STEP.. ஸ்டேஜ்லயே கிரிக்கெட்.. வெளியான வேற லெவல் BEHINDWOODSGOLDICONS விருது விழா EXCLUSIVE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

7 வருட Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த முன்னெடுப்பாக கடந்த மார்ச் 7-ஆம் தேதி ‘உதயம் இட்லி அரிசி வழங்கும்’ BehindwoodsGoldIcons டிஜிட்டல், டெலிவிஷன் மற்றும் சோஷியல் மீடியா விருதுகள் வழங்கும் விழா நிகழ்ந்தது.

இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக ரசிகர்களின் அன்பைப் பெற்றவரும், சின்ன தலயுமான ரெய்னா THE GOLDEN GLOBAL ICON OF INSPIRATION - SPORTS விருதினை பெற்றார். இந்த விருதினை மாஸ்டர் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெய்னாவுக்கு வழங்கி கவுரவித்தார்.

இந்த நிகழ்வில் ‘வணக்கம்.. நல்லாருக்கேன்’ என தமிழில் பேசிய ரெய்னா, கிரிக்கெட் விளையாடி காண்பித்தார். அத்துடன் சின்ன தல ரெய்னா, முன்பே வா பாடலை பாடி ரசிகர்களை அசரவைத்தார். பாட்டு, விளையாட்டுடன் விடவில்லை நம்ம சின்ன தல.  நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மா.கா.பா. ஆனந்த் மற்றும் பிரியங்காவுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தின் ஐகானிக் ஸ்டெப்பினை போட்டு தளபதி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த அஸ்வினும், சிவாங்கியும் முறையே குக் வித் கோமாளி ரியாலிட்டி நிகழ்ச்சிக்கான மோஸ்ட் பாப்புலர் ஆடவர் மற்றும் பெண்ணுக்கான விருதுகளை பெற்றுள்ளனர்.  அவர்கள் தாராள பிரபு பாடலுக்கு நடனம் ஆடும் Glimpse-ம் தற்போது வெளியாகியுள்ள இந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட Behindwoods Gold Icons விருது வழங்கும் விழாவில் ரெய்னாவின் Fun Filled வீடியோவை இணைப்பில் காணலாம். தொடர்ந்து Behindwoods Gold Icons விருது நிகழ்வுகளின் அப்டேட்களுக்கு Behindwoods-உடன் இணைந்திருங்கள்.

VIDEO: ரெய்னா!.. மாஸ்டர் STEP.. ஸ்டேஜ்லயே கிரிக்கெட்.. வெளியான வேற லெவல் BEHINDWOODSGOLDICONS விருது விழா EXCLUSIVE வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Raina Playing Ahswin Sivaangi Reacts Behindwoods Gold Icons Video

People looking for online information on Ashwin, Behindwoods, BehindwoodsGoldIcons, Cricket, IPL2021, Master, Raina, Sivaangi, SureshRaina, TeamIndia, TelevisionDigitalAndSocialAwards, Trending, Vaathicoming will find this news story useful.