ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சமூகத்தில் நலிவடைந்தோருக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் கூட கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது சகோதரரின் பிறந்நநாளை முன்னிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''நண்பர்களுக்கு வணக்கம் ..இன்று என் தம்பியின் பிறந்தநாள். ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன். அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.
அதற்கான அறிவிப்பு இது. அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. ஆம் நாங்கள் பல நாட்கள் காத்திருந்து தற்போது தான் ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது.
ராகவேந்திரா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது நிலவிவரும் கொரோனா சூழ்நிலை முடிவுற்ற பின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அனைவரும் தங்களின் நல்லாசியையும், ஆதாரவையும் எனது தம்பிக்கு அளிக்குமாறு வேண்டுகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.