BREAKING : லாரன்ஸ் - வடிவேலு காம்போவில் 'சந்திரமுகி 2'.. ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள சந்திரமுகி படத்தின் இரண்டாம் பக்கம் குறித்து, சிறப்பான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'அவன் இவன்' மூலம் பிரபலமான நடிகர் ராமராஜ் மறைவு.. கடைசி Reels வீடியோவால் உருகும் ரசிகர்கள்

மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான 'மணிசித்ரதாலு' படத்தை இயக்குனர் ஃபாசில் இயக்கியிருந்தார். மோகன்லால், சுரேஷ் கோபி, நெடுமுடி வேணு, ஷோபானா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் மாற்றங்கள் நிகழ்த்தி, இயக்குநர் பி.வாசு கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த படம், கன்னடத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில்; தமிழிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பி. வாசு உருவாக்கி இருந்தார்.

உருவாகும் 'சந்திரமுகி 2'

'சந்திரமுகி' என்னும் பெயரில் தமிழில் வெளியான இந்த படத்தில், ரஜினியுடன், பிரபு, ஜோதிகா, வடிவேலு, நயன்தாரா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 890 நாட்கள் வரை ஓடிய சந்திரமுகி திரைப்படத்தில், ரஜினிகாந்தின் திறன் வாய்ந்த Performance, ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு, வடிவேலு காமெடி உள்ளிட்ட பல விஷயங்கள் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.

இந்நிலையில், சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில், நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு, கடந்த ஜூன் மாதம் வெளியாகி இருந்தது. இயக்குனர் பி. வாசு இயக்கும் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இரண்டாம் பாகத்தில் இணைந்து வடிவேலு

முதல் பாகத்தில், காமெடியில் அதகளம் பண்ணிய வடிவேலு, இரண்டாம் பாகத்திலும் இணைந்துள்ளார். மேலும், சந்திரமுகி 2 படத்திற்கு, பாகுபலி மற்றும் RRR படங்களுக்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவாளராக RD ராஜசேகர் ஒப்பந்தமாக, கலை இயக்குனராக தோட்டா தரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

ஷூட்டிங் அப்டேட்

இதனைத் தொடர்ந்து, 'சந்திரமுகி 2' படத்தின் ஷூட்டிங் குறித்து, நம்பத் தகுந்த வட்டாரங்களின் படி சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 15 ஆம் தேதியன்று, மைசூரில் வைத்து இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும், இரண்டு வாரம் அங்கே படப்பிடிப்பு நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | சந்தானம் நடிப்பில் ரிலீசாகும் புதிய படம்.. தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

தொடர்புடைய இணைப்புகள்

Raghava lawrence starrer chandramukhi 2 shooting update sources

People looking for online information on Chandramukhi 2, Chandramukhi 2 shooting update, Raghava Lawrence will find this news story useful.