மீண்டும் இணைந்த காஞ்சனா ஹிட் கூட்டணி… ருத்ரன் டீம் வெளியிட்ட செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்பட தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் ருத்ரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

மீரா மிதுன் வழக்கு.. சர்ச்சை பேச்சு விவகாரத்தில் மீண்டும் நீதிமன்றம் புதிய உத்தரவு ?

இயக்குனராகும் தயாரிப்பாளர்

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் முக்கியமான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ருத்ரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இணைந்த காஞ்சனா கூட்டணி

“ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியில் நடந்து முடிந்த படப்பிடிப்பை அடுத்து சென்னையில்ச் சமீபத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்தது. இதில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.  இதில் நடிகர் சரத்குமார் பங்குபெறும் காட்சிகள் படமாக்கபட்டன. இந்த படத்தில் வில்லனாக சரத்குமார் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படப்பிடிப்புத் தளத்தில் சரத்குமார் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றன.

காஞ்சனா

ஏற்கனவே ராகவா லாரன்ஸூம் சரத்குமாரும் இணைந்து நடித்த காஞ்சனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. காஞ்சனா படத்தில் சரத்குமார் திருநங்கையாக வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அவருக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.  கொலை செய்யப்பட்ட சரத்குமாருக்காக லாரன்ஸ் பழிவாங்குவதாக கதை அமைக்கப்பட்டு இருக்கும். இதில் சரத்குமார் இடம்பெறும் ப்ளாஷ்பேக் காட்சிகள் மிகவும் எமோஷனலாக உருவாக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைவதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

பர்ஸ்ட் லுக் அப்டேட்

இந்நிலையில் தற்போது படக்குழுவினர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ஆண்ட்ரியாவுக்கு கெடச்ச கோல்டன் விசா ... வைரலாகும் புகைப்படம் - வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrence sarathkumar rudhran movie first look update

People looking for online information on சரத்குமார், ராகவா லாரன்ஸ், ருத்ரன், Raghava Lawrence, Rudhran Movie, Rudhran movie first look, Sarathkumar will find this news story useful.