உலகமெங்கும் இவ்ளோ ஸ்கிரீன்ல ரிலீஸ் ஆகுதா?.. மாஸ் காட்டும் ராகவா லாரன்ஸின் ருத்ரன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் நடிகர், கோரியோகிராஃபர், இயக்குநர் என பல துறைகளில் இயங்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவருடைய அடுத்த படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்  நடிக்கிறார். 

Advertising
>
Advertising

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா, டைரி போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

திரைக்கதை எழுத்தாளர் கே.பி.திருமாறன் இப்படத்துக்கான கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் பூமி எனும் வில்லன் கதாபாத்திரத்தில் சரத்குமார் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர், ஜோர்த்தாலே மற்றும் பாடாத பாட்டெல்லாம் ரீமிக்ஸ் பாடல் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

தமிழ் புத்தாண்டு தினத்தன்று  (14.04.2023) வெளியாகியுள்ள ருத்ரன் திரைப்படம் மொத்தம் உலகெங்கும் 1500 ஸ்கிரீன்களில் திரையிடப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸின் பரபரப்பான அதிரடியான ஆக்சன் காட்சிகள் மற்றும் லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் என அனைத்து சாரருக்குமான ஜனரஞ்சக அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrence Rudhran releasing in 1500 screens world wide

People looking for online information on Five Star Creations LLP, Priya Bhavani Shankar, Raghava Lawrence, Rudhran, S Kathiresan will find this news story useful.