இது மாஸான காம்போ ஆச்சே.. 'துர்கா' படம் குறித்து ராகவா லாரன்ஸ் போட்ட ட்வீட்.. இனிமே சரவெடி தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடித்து வரும் 'துர்கா' திரைப்படம் குறித்து புதிய அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

தொடர்ச்சியாக பேய்ப் படங்கள் இயக்கி, அதில் மிகப் பெரிய வெற்றி கண்டவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக அறிமுகமான ராகவா லாரன்ஸ், அதன் பிறகு திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து, இயக்குனராக தெலுங்கில் அவதாரம் எடுத்த இவர், முனி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநரானார். இந்த திரைப்படம் அதிகம் வரவேற்பைப் பெற்றிருந்தது.

தொடர்ந்து, முனியின் அடுத்தடுத்த பாகங்களாக காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என பேய் படங்களை தொடர்ச்சியாக இயக்கியுள்ளார். இந்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்துள்ளது.

புதிய திரைப்படங்கள்

இறுதியாக, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், அக்ஷய் குமார் நடிப்பில், காஞ்சானவின் ஹிந்தி ரீமேக்கான 'லட்சுமி பாம்ப்' திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இயக்குனர் வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கும் 'அதிகாரம்' என்னும் திரைப்படத்தில் நாயகனாக ராகவ் லாரன்ஸ் நடித்து வருகிறார்.

ஃபர்ஸ்ட் லுக்

அதே போல, துர்கா என்னும் திரைப்படம் ஒன்றிலும் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இதில், சாமி கெட்டப்பில் ஒருவர் இருக்கும் போஸ்டரும், லாரன்ஸின் மாறுபட்ட லுக் ஒன்றிலான போஸ்டரும் வெளியாகியிருந்தது.

நீண்ட நாட்களாக, இந்த திரைப்படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்து வந்த நிலையில், துர்கா படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகும் என ராகவா லாரன்ஸ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், இன்று காலை இதுகுறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அசத்தல் அப்டேட்

'துர்கா' திரைப்படத்தின் இயக்குனர்கள் யார் என்பதை லாரன்ஸ் தற்போது வெளியிட்டுள்ளார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் என அறிவித்துள்ளார். இது பற்றி, அன்பு மற்றும் அறிவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராகவா லாரன்ஸ், 'துர்கா படத்தின் இயக்குனர்களாக அன்பறிவ் ஆகியோரை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இது ஒரு பவர் பேக் படமாக இருக்கும். உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டும் ரசிகர்கள்
 

 

இரட்டையர்களான அன்பு மற்றும் அறிவு ஆகியோர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணிபுரிந்துள்ளார். அதே போல, 'KGF' திரைப்படத்திற்காக, சிறந்த ஸ்டண்ட் இயக்குனரின் தேசிய விருதையும் தட்டிச் சென்றுள்ளனர்.

அடுத்ததாக வெளிவரவிருக்கும், 'எதற்கும் துணிந்தவன்', 'பீஸ்ட்', 'விக்ரம்', 'KGF 2' உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் இவர்கள் தான் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பல சூப்பர் ஹிட் படங்களுக்கு, சண்டைக் காட்சிகள் அமைத்துள்ள அன்பறிவ் ஆகியோர், தற்போது இயக்குனராக அறிமுகமாகவுள்ளதால், ரசிகர்கள் அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrence reveals the director name of Durga movie

People looking for online information on Anbariv, Durga, Kanchana, Muni 3 - Ganga, Raghava Lawrence will find this news story useful.