நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக தற்போது 'ருத்ரன்', 'சந்திரமுகி 2', 'அதிகாரம்', 'துர்கா' உட்படப் பல படங்களில் நடித்து வருகிறார். இவற்றுள் 'சந்திரமுகி - 2' அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக லாரன்ஸ் தயாராகி வருகிறார். இந்நிலையில் நடிகர் லாரன்ஸ், தமது அறக்கட்டளைக்கு நன்கொடை வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் இதற்கான காரண பின்னணி குறித்தும் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Also Read | மகிழ்ச்சி வெள்ளத்தில் "மாமன்னன்" உதயநிதி.. மாரி & வடிவேலுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்!
இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ், தமது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் வணக்கம், நான் இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் சந்திரமுகி 2வுக்காக என் உடலை மாற்றிக் கொள்ள நான் எடுக்கும் ஒரு சிறு முயற்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தை கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எனக்கு வேண்டும்.
“இத்தனை ஆண்டுகளாக என் அறக்கட்டளைக்கும் ஆதரவளித்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்து உங்கள் நன்கொடைகளால் என் சேவைக்கு ஆதரவு கொடுத்தீர்கள். என்னால் முடிந்ததை நான் செய்துள்ளேன், எனக்கு தேவைப்படும் போதெல்லாம் உங்கள் உதவியை பெற்று என்னால் முடிந்த உதவிகளை அறக்கட்டளை மூலம் செய்துள்ளேன்.
இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசீர்வாதம் மட்டும் எனக்கு போதும். இப்போது, நான் நல்ல இடத்தில் இருக்கிறேன், அத்துடன் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகியும் வருகிறேன், எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்கிறேன்!. அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். சேவையே கடவுள்.. அன்புடன் ராகவா லாரன்ஸ்.” என குறிப்பிட்டுள்ளார்.
Also Read | 'வாரிசு' புது லுக்கில் தளபதி விஜய்.. ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த செல்ஃபி.. தீயாய் பரவும் ஃபோட்டோ!