FESTIVAL -ல் ரிலீஸ் ஆகும் லாரன்ஸ் & ப்ரியா பவானி சங்கரின் புதிய படம்.. மாஸ் போஸ்டருடன் OFFICIAL அப்டேட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | PS1: "சாய் கோபுரம் அருகே Selfie எடுக்குறோம்.. ஆனா".. தஞ்சை பெரிய கோயில் பற்றி விக்ரம் Mass Speech

இந்த ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.  கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் முக்கியமான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.

இந்த படத்தில் வில்லனாக சரத்குமார் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படப்பிடிப்புத் தளத்தில் சரத்குமார் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றன.

இந்த படத்தில் பழைய கிளாசிக் படமான வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை  ரீமிக்ஸ் செய்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்.

"ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பொள்ளாச்சி & சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் படத்தின் புதிய ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று  (14.04.2023) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் இந்த வருடம் கிறிஸ்துமஸ் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் தற்போது ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Read | "எதுவும் இங்கே சரியும் இல்ல தவறும் இல்ல".. வெளியான'விக்ரம் வேதா' தீம் பாடல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrence Priya bhavani Shankar Rudhran movie release date

People looking for online information on Priya Bhavani Shankar, Raghava Lawrence, Rudhran Movie, Rudhran movie Release Updates will find this news story useful.