"அசல் கோலார் எந்த கோளாறும் பண்ணல" - ஜோர்த்தாலே பாட்டு பின்னணி .. லாரன்ஸ் ஜாலி பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மற்றும் கோரியோகிராஃபருமான ராகவா லாரன்ஸ் மற்றும் ருத்ரன் படத்தின் இயக்குனர் கதிரேசன் ஆகியோர் நமது சேனலுக்கு பிரத்யேக நேர்காணலை அளித்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

தமிழ் சினிமாவில் நடிகர், கோரியோகிராஃபர், இயக்குநர் என பல துறைகளில் இயங்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவருடைய அடுத்த படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்  நடிக்கிறார்.  பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

திரைக்கதை எழுத்தாளர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக பூமி எனும் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று  (14.04.2023) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் ருத்ரன் படத்தின் இயக்குநர் கதிரேசன் ஆகியோர்  Behindwoods சேனலுக்கு பிரத்யேக நேர்காணலை அளித்திருக்கின்றனர். அதில் படம் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியிருக்கின்றனர்.

இதில், இப்படத்தில் இடம்பெற்ற அசல் கோலாரின் ஜோர்த்தாலே பாடல் பற்றி கேட்டதற்கு பதில் அளித்த நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், “ஜோர்த்தாலே பாடல் வேண்டும் என்று நான்தான் இயக்குனரிடம் கேட்டேன். அந்த பாடல் மிகவும் லோக்கலாக இருக்கும். அந்த அளவுக்கு கொண்டு வர முடியுமா என்று தெரியவில்லை.

ஏனென்றால் இந்த படத்தில் ஹீரோ கொஞ்சம் கிளாஸாக இருப்பார். அதேசமயம் ஒரு மாஸ் கலந்து ஸ்டைலிஷ் ஆன பாடலாக இந்த பாடலை திரையில் பிரசன்ட் பண்ணலாம் என்று நினைத்தேன். அதை முயற்சி செய்து கொண்டு வந்திருக்கிறோம். அதற்கு அந்த பசங்களும், அசல் கோலாரும் முழுமையாக ஒப்புக்கொண்டனர். அசல் கோலார் எந்த கோளாறும் பண்ணல.” என கலகலப்பாக பேசினார்.

ராப் பாடகர் அசல் கோலார், பிக்பாஸ் 6வது சீசன் மூலம் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"அசல் கோலார் எந்த கோளாறும் பண்ணல" - ஜோர்த்தாலே பாட்டு பின்னணி .. லாரன்ஸ் ஜாலி பேட்டி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrence on Rudhran jorthaale Asal Kolar

People looking for online information on Asal Kolar, Raghava Lawrence, Rudhran jorthaale will find this news story useful.