CHANDRAMUKHI 2 : மேக்கப் போட்டு தயாராகும் சந்திரமுகி 2 ..? கங்கனாவின் VIRAL BTS ஃபோட்டோ .. சம்பவம் இருக்கு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் மைசூரில் பூஜையுடன் துவங்கியது. 'சந்திரமுகி 2'  திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்க, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ்க்குமரன் மேற்பார்வை செய்கிறார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அப்போ ரோஜா ஸ்ரீ.. இப்போ பூஜா.. பாட்டு, டயலாக்னு அமர்க்களம் பண்ணும் DJ பிளாக் | super singer 9 

படக்குழுவினர்

இப்படத்தினை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இயக்குகிறார். இப்படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு,நடிகர் ரவி மரியா, மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் சில நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது. இந்த படப்பிடிப்பில் நடிகை ராதிகா & நடிகர் வடிவேலு மற்றும் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டனர்.

Images are subject to © copyright to their respective owners.

'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு & தோட்டா தரணி கலை இயக்குனர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.

கங்கனா

நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர். சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர்.  2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்தாண்டு சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். 

Images are subject to © copyright to their respective owners.

சந்திரமுகி..

சந்திரமுகி முதல் பாகம் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா முற்றிலும் மாறுபட்ட கேரக்டரான சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெய்வ நம்பிக்கை மற்றும் மனோதத்துவ முறையில் ஜோதிகாவை சந்திரமுகியிடம் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மீட்கும் காட்சிகள் பிரம்மிப்பூட்டின. சுமார் 800 நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிய பிளாக்பஸ்டர் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கங்கனா ரனாவத், தமது  கேரக்டருக்காக ஒப்பனை போடும்போது அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.

Also Read | "ஏன் பூஜாவுக்கு மட்டும்.?".. DJ பிளாக் பாட்டு போடுவது குறித்து மேடையிலேயே வருத்தப்பட்ட குடும்பத்தினர்.. | SUPER SINGER 9

தொடர்புடைய இணைப்புகள்

Raghava lawrence kangana ranaut chandramukhi 2 viral pic

People looking for online information on Chandramukhi 2, Kangana ranaut, Raghava Lawrence, Rajinikanth will find this news story useful.