BREAKING : கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் லாரன்ஸ்... இப்படி ஒரு சர்ப்ரைஸா! சிலிர்க்கும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காதல் டிராமா, ரொமாண்டிக், த்ரில்லர் படங்களை இயக்கி பெயர் பெற்ற இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertising
>
Advertising

முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 எனத் தொடர்ச்சியாக ஹாரர் காமெடி படங்களை இயக்கி வெற்றி கண்டவர் ராகவா லாரன்ஸ். கடைசியாக 'காஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக்கை அக்ஷய் குமார் நடிப்பில்'லக்ஷ்மி' என்ற பெயரில் இந்தியில் இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தான் அடுத்து இயக்கும் புதிய படத்திற்கு துர்கா என பெயரிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

முனி சீரிஸ் படங்களை தொடர்ச்சியாக இயக்கி வந்ததுக்கு பலரால் லாரன்ஸ் ட்ரோல் செய்யப்பட்டாலும், இவரின் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. இவரின் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்தது. இடையில் நடிப்பில் கவனம் செலுத்திய லாரன்ஸ் தற்போது மீண்டும் இயக்கத்திற்கு திரும்பிவிட்டார். தற்போது கைவசமாக துர்கா, அதிகாரம், ருத்ரன் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

இந்நிலையில், சினிமா ரசிகர்களை மட்டுமின்றி கோலிவுட் பிரபலங்களுக்கு ருசிகரமான தகவல் தான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஸ்டைலிஸ், காதல் ரொமாண்டிக் படங்களை இயக்கி வந்த கெளதம் வாசுதேவ் மேனன் முதன் முறையாக ராகவா லாரன்ஸை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தவல் வெளியாகியுள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு சிம்பு - கெளதம்மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தின்  இரண்டாவது லுக் போஸ்டர்  டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சிம்பு ரசிகர்கள் எப்போது இப்படம் வெளியாகும் என்ற ஆவலோடு காத்திருக்கின்றனர்.

கெளதம் மேனன் -ராகவா லாரன்ஸ் காம்பினேசன் புதுப்படம் என்பதே ஆச்சர்யம் அளித்தாலும், இவை எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. த்ரில்லர் கலந்த ஹாரர் படமா அல்லது முழுக்க முழுக்க காதல் படமா என்பதே சஸ்பென்ஸ் ஆக உள்ளது. ஜோஷ்வா இமை போல் காக்க, வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

கெளதம் வாசுதேவ் மேனன் - ஐசரி கணேஷ் கூட்டணியுடன் முதல் முறையாக ராகவா லாரன்ஸ் இணைகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆக்சன் கலந்த கமர்ஷியல் படமாகவும் ஸ்டைலிஸ் லுக்கில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrence in the new film directed by Gautam Vasudev Menon

People looking for online information on 2023, Gautham Vasudev Menon, GVM next Movie, Isari ganesh, R, Raghava Lawrence, Vendhu Thanindhathu Kaadu will find this news story useful.