நடிகர் மற்றும் கோரியோகிராஃபருமான ராகவா லாரன்ஸ் மற்றும் ருத்ரன் படத்தின் இயக்குனர் கதிரேசன் ஆகியோர் நமது சேனலுக்கு பிரத்யேக நேர்காணலை அளித்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் நடிகர், கோரியோகிராஃபர், இயக்குநர் என பல துறைகளில் இயங்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவருடைய அடுத்த படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
திரைக்கதை எழுத்தாளர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக பூமி எனும் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று (14.04.2023) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் ருத்ரன் படத்தின் இயக்குநர் கதிரேசன் ஆகியோர் நமது Behindwoods சேனலுக்கு பிரத்யேக நேர்காணலை அளித்திருக்கின்றனர். அதில் ருத்ரன் திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியிருக்கின்றனர்.
இந்நிலையில் ருத்ரன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் பாடல் ரீமிக்ஸ் பற்றி பேசிய நடிகரும் நடன இயக்குநருமான லாரன்ஸ் மாஸ்டர், “என்னுடைய எல்லா படத்திலும் ஒரு ரீமிக்ஸ் பாடல் இடம் பெற வேண்டும் என்று நினைப்பேன். எனக்கு என் அம்மாவுடன் நட்பு அதிகம். அவரும் நானும் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்போம். அப்போது அம்மா இந்த பாடல் குறித்து சொன்னார். இந்த பாடலை ரீமிக்ஸ் பண்ணினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இதையும் யாரோ ஏற்கனவே செய்து வைத்திருந்தார்கள். அவர்களிடம் பேசி பாடலை வாங்கி விட்டோம்” என்று குறிப்பிட்டார்.