CHANDRAMUKHI 2 : சந்திரமுகி ஷூட்.. பிரபல இந்திய சினிமா டெக்னீசியன் திடீர் விசிட் ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்திரமுகி-2 படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு பிரபல முன்னணி ஒளிப்பதிவாளர் விசிட் அடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | Video: "பிரிட்டிஷ் பொண்ண Love பண்ணும் இந்திய பையன்".. 'PRINCE' பற்றி SK ..!

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் மைசூரில் பூஜையுடன் துவங்கியது.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  'சந்திரமுகி 2'  திரைப்படத்தை தயாரிக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் மேற்பார்வையில்  ‘சந்திரமுகி 2’ படம் உருவாகிறது.

இப்படத்தினை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார். இப்படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு,நடிகர் ரவி மரியா, மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் சில நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது. இந்த படப்பிடிப்பில் நடிகை ராதிகா & நடிகர் வடிவேலு மற்றும் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டனர்.  இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்தது.

பின்னர் சந்திரமுகி 2 படத்திற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது உடலமைப்பை மாற்றிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இந்த படத்திற்கு கலை இயக்குநர் பணிகளை தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் ISC, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் ISC வருகை தந்துள்ளார்" என கூறி BTS புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் ராஜசேகர், பில்லா -2, காக்க காக்க, எனிமி ஆகிய படங்களில் பணிபுரிந்தவர். அதேபோல் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், ஆய்த எழுத்து, சிட்டிசன், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய படங்களில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "விஜய் தேவரகொண்டா கூட சேர்ந்து ஒரு படம்".. 'PRINCE' சிவகார்த்திகேயனின் வைரல் பேச்சு!

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrence Chandramukhi 2 Movie Shooting BTS Image of Dop Raja Sekhar and Ravi K Chandran

People looking for online information on Chandramukhi 2, Chandramukhi 2 Movie Shooting, Raghava Lawrence, Raja Sekhar, Ravi K Chandran will find this news story useful.