ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்! FIRST LOOK எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ருத்ரன்.

இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பில்லா 2, மாஸ், காக்க காக்க படங்களின் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் முதல்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படம் ஏப்ரல் 14, 2022 தமிழ் புத்தாண்டிற்கு வெளியாக உள்ளது. இதை படக்குழு அதிகாரப்ப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrance priya bhavani shankar new movie update

People looking for online information on GV Prakashkumar, Priya Bhavani Shankar, Raghava Lawrance will find this news story useful.