ஜிகர்தண்டா டபுள் X பட ஷூட்டிங்.. நடிகர் ராகவா லாரன்ஸை காண குவிந்த ரசிகர்கள்! VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். 

Advertising
>
Advertising

Also Read | ‘டைட்டில் வின்னர் யாரு..?’ - எப்படி கேட்டாலும் இவங்க பேரை அடித்து சொல்லும் ஆயிஷா.! EXCLUSIVE INTERVIEW

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன், அம்பிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.   ஜிகர்தண்டா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா இந்த படத்திற்காக 2015 ஆம் ஆண்டு பெற்றார்.

இந்தப் படம் வெளியாகி  8வது ஆண்டு விழாவை முன்னிட்டு  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில்  ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும்,  அதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரப்பூர்வமாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார்.

இந்த படத்திற்கு "ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ்" என தலைப்பிட்டு படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருந்தன.

இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.  இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஷங்கர் & ராம் சரண் இணையும் RC15 படத்திலும், விஜய் நடிக்கும் 'வாரிசு'படத்திலும், விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் எஸ். ஜே. சூர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

  மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12  முதல் மதுரையில் துவங்கி உள்ளது. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸை காண ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ரசிகர்கள் குவிந்தனர். அங்கு திரண்டு ஆரவாரம் செய்த ரசிகர்களை நோக்கி ராகவா லாரன்ஸ் கையசைத்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்கு கோபுர வாசலுக்கு செல்லும்  டவுன் ஹால் சாலையில் ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | மகன் விஜய பிரபாகரனுக்கு இனிப்பு ஊட்டிய கேப்டன் விஜயகாந்த்.. வைரலாகும் புதிய ஃபோட்டோஸ்

ஜிகர்தண்டா டபுள் X பட ஷூட்டிங்.. நடிகர் ராகவா லாரன்ஸை காண குவிந்த ரசிகர்கள்! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrance in Jigarthanda Double X Madurai Shooting

People looking for online information on Jigarthanda Double X, Jigarthanda Double X Shooting update, Raghava Lawrence will find this news story useful.