வேற லெவல்..பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நடிகை ராதிகா! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது சாதனைகளுக்காக விருது பெற்று உரையாற்றிய ராதிகா சரத்குமார்

Radikaa Sarathkumar receives award for her achievements in the UK Parliament
Advertising
>
Advertising

Also Read | "பீஸ்ட்" அபர்னா தாஸ் கூட ஜோடி சேர்ந்த 'BIGGBOSS' கவின்.. வெளிவந்த தெறி FIRST LOOK போஸ்டர்!

திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார்.

Radikaa Sarathkumar receives award for her achievements in the UK Parliament

தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளா ராதிகா சரத்குமார், “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

வேற லெவல்..பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நடிகை ராதிகா! முழு விவரம் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Radikaa Sarathkumar receives award for her achievements in the UK Parliament

People looking for online information on இங்கிலாந்து நாடாளுமன்றம், ராதிகா சரத்குமார், Radikaa Sarathkumar, Radikaa Sarathkumar receives award, UK Parliament will find this news story useful.