BHARATHIRAJA: “என் இனிய டைரக்டரே..” பாரதிராஜா நலம் பெற பிரான்ஸ் தேவாலயத்தில் ராதிகா பிரார்த்தனை.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, தமிழ் சினிமாவின் மண் மனம் மாறாத திரைக்காவியங்களை இயக்கியவர்.

Advertising
>
Advertising

Also Read | Television Premiere: பிரபல டிவி சேனலில் காதல் & நகைச்சுவை நிறைந்த ‘ஹே சினாமிகா’ - எப்போ? எதுல?

சிவாஜி, ரஜினி, கமல் என பெரும் நடிகர்களை இயக்கிய பாரதிராஜா, சமீப வருடங்களில் வெளியான 'குரங்கு பொம்மை', 'ஈஸ்வரன்', 'ராக்கி', 'குற்றமே தண்டனை' ஆகிய படங்களில் தம் எனர்ஜி குறையாமல் நடிக்கவும் செய்துள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் தனுஷ்க்கு தாத்தாவாக பட்டையை கிளப்பியிருக்கிறார்.

இந்நிலையில்தான் இயக்குநர் பாரதிராஜா, உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

 

இந்நிலையில் நடிகை ராதிகா, இயக்குநர் பாரதிராஜா உடல்நலம் தேறிவர, பிரான்ஸ் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துள்ளார். இதுகுறித்த வீடியோவை தமது ட்விட்டரில் பதிவிட்ட  ராதிகா சரத்குமார், “என் இனிய பாரதிராஜா அவர்களே.. நீங்கள் நலம்பெற வேண்டி பிரான்ஸில் உள்ள லூர்து தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு செய்துள்ளேன். நேரில் வந்து உங்களை சந்திக்க வேண்டும். உங்களுடன் பேசாமல் மிஸ் பண்ணுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். நடிகை ராதிகாவை இயக்குநர் பாரதிராஜா தாம் இயக்கிய, ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில் நாயகியாக அறிமுகப் படுத்தினார்.

முன்னதாக கவிப்பேரரசு வைரமுத்து பாரதிராஜாவை மருத்துவமனையில் சென்று சந்தித்து நலம் விசாரித்துவிட்டு, “பாரதிராஜா மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன்.  நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய சுத்த மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள்.

அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார். கலையுலகை ஆண்டு வருவார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Also Read | Thiruchitrambalam: கவனிச்சீங்களா? ‘திருச்சிற்றம்பலம்’ படம் முழுதும் ஒரு கேரக்டராகவே வரும் ‘ராஜா’.!

தொடர்புடைய இணைப்புகள்

Radhika prays for Bharathiraja in France Lourdes church

People looking for online information on Bharathiraja, Bharathiraja Health, Radhika will find this news story useful.