பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் டிரெய்லர்.. செம ட்ரீட் இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கடும் வரவேற்பை பெற்றுள்ளது.  ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸின் புதிய படம் இதுவாகும்.

Advertising
>
Advertising

வசூல் வேட்டை
நடிகர் பிரபாஸ் என்றவுடன் அனைவருக்கும் சட்டென்று பாகுபலி திரைப்படம் நினைவுக்கு வந்து விடும். இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தியது. அதன் பின்னர் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சாஹோ’ படம் வெளியானது.

ராதே ஷ்யாம் டிரெய்லர்
ஆனால் இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில்தான் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ்.  ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில்  பூஜா ஹெக்டே பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ளார்.  வம்சி மற்றும் பிரமோத் படத்தை தயாரித்துள்ளனர். இந்த நிலையில்தான் ராதே ஷ்யாம் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

ரிலீஸ் எப்போது?
விறுவிறுப்பான காட்சிகள் அமைந்துள்ள டிரெய்லரை பார்க்கும்போதே இது ஒரு திரில்லர் படம் என்பது தெளிவாக புரிகிறது. ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் மிக அழகாக உள்ளன.  பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேக்கு இடையிலான ரொமான்ஸ் இப்போதே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மொத்தத்தில் ரசிகர்களுக்கு ஒரு திரில்லர் விருந்து காத்திருக்கிறது. இந்த திரைப்படம் தெலுங்கில் மட்டுமில்லாது  தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் மார்ச் 11-ம் தேதி வெளியாகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Radhe Shyam starring Prabhas trailer ராதே ஷ்யாம்

People looking for online information on Movie, Radhe Shyam, Trailer will find this news story useful.