பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் 'சாஹோ' படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றது.
அதனைத்தொடர்ந்து காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடிக்கிறார். இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேயின் 'ராதே ஷ்யாம்' உலகம் முழுவதும் ஜீலை 30, 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக, படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் ரிலிஸ் தேதி போஸ்டர் வெளியானது. அதில் 'ராதே ஷியாம்' ஜனவரி 14, 2022 அன்று திரையரங்குகளில், பொங்கல், மஹாசங்கராந்தி நாளில் வெளியிடப்படும் என இருந்தது.
பின்னர் இதே தினங்களில் மகேஷ் பாபுவின் சர்காரு வாரிபட்டாவும், பவன் கல்யானின் பீம்லா நாயக்கும் வெளியாவதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தல அஜித்தின் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. மேலும் ராஜமௌலி இயக்கும் RRR படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என தெரிகிறது. இந்திய சினிமாவில் கோலோச்சும் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் ஒரே விழாவை முன்னிட்டு வெளியாவது இந்த படங்களின் மொத்த வசூலும் கனிசமாக பாதிக்கப்படலாம். போதுமான திரையரங்குகள் கிடைப்பதிலும் சிக்கல்கள் எழலாம்.
இதனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் 'ராதே ஷியாம்' படம் தள்ளிப்போகும் என வதந்திகள் பரவின. இதனை பொய்யாக்கும் விதமாக படத்தின் PRO நிகில் முருகன், இந்த படத்தின் வெளியீட்டு போஸ்டரை மீண்டும் டிவிட்டரில் பதிவிட்டு "ராதே ஷ்யாம்" ஜனவரி 14,2022 பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.