விஜய் டிவியில் ஒரு பக்கம் ஏராளமான ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் சூழலில், இன்னொரு பக்கம் நிறைய ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
Image Credit : Vijay Television
பிக் பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றும் வருகிறது.
அந்த வகையில், பல ஆண்டுகளுக்கு முன்பே கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி நடைபெற்றதுடன் பல சீசன்களும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்படி இருக்கையில், இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
இதன் நான்காவது சீசன் சமீபத்தில் ஆரம்பமாகி வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில், கலக்கப் போவது யாரு மூலம் புகழ் அடைந்த போட்டியாளர்கள் ஒரு அணியாக வந்து காமெடி செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசனில், மதுரை முத்து, தாடி பாலாஜி, ரேஷ்மா மற்றும் ஸ்ருதிகா ஆகியோர் நடுவர்களாக இருந்து வரும் சூழலில், அறந்தாங்கி நிஷா மற்றும் பாலா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகின்றனர்.
Image Credit : Vijay Television
இதனிடையே, கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் 4 நிகழ்ச்சியில் சமீபத்திய எபிசோடில் நக்கீரன் கோபால் மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்தது கொண்டனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் வெற்றியாளரான ஸ்ருதிகா, முழுக்க முழுக்க சிரித்த முகத்துடன் குழந்தை போல பேசிக் கொண்டு வலம் வந்தார்.
அதே போல தான், தற்போது கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசனிலும் ஸ்ருதிகா நடுவாரக இருந்த போதிலும், குக் வித் கோமாளி மாதிரியே இதிலும் சுட்டிக் குழந்தை போல இருந்து வருகிறார்.
Image Credit : Vijay Television
இதனிடையே, சமீபத்திய எபிசோடில் விருந்தினராக வந்த ராதாரவியிடமும் குழந்தையை போல ஸ்ருதிகா பேச, ராதாரவியும் பதிலுக்கு கலகலப்பாகவும் ஸ்ருதிகாவை கிண்டல் செய்கிறார். அப்போது தான், நக்கீரன் கோபாலுக்கு பெரிய மீசை இருப்பதாகவும், உங்களுக்கு மட்டும் ஏன் பெரிய மீசை இல்லை என்றும் ராதாரவியிடம் ஸ்ருதிகா கேட்க, "அது வரல. அவ்ளோ தான்" என ஜாலியாக கூறியதுடன் மட்டுமில்லாமல், மற்றவர்கள் பேசும் போது ஸ்ருதிகா கொடுக்கும் ரியாக்ஷனையும் ராதாரவி அப்படியே இமிடேட் செய்யும் விஷயங்களும் அதிக கவனம் பெற்று வருகிறது.