"விக்ரமன் கிட்ட புடிச்ச விஷயம் அதுதான்".. மனம் திறந்த ரச்சிதா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |
Advertising
>
Advertising

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது. இப்படியான சுவாரஸ்யமான சம்பவங்களால் பிக்பாஸ் வீடு நிறைந்துகொண்டிருக்கிறது.  இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய ரச்சிதா இன்ஸ்டாகிராம் நேரலையில் பல விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். குறிப்பாக பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் தன்னுடைய அனுபவம் குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

அப்போது, விக்ரமன் பற்றி ரச்சிதா பேசுகையில்,"விக்ரமன் நல்ல நண்பர். ரொம்ப லேட்டா தான் எனக்கும் அவருக்கும் ஒரு இணைப்பு ஏற்பட்டுச்சு. சொல்லப்போனா பேசவே லேட்டா தான் ஆரம்பிச்சோம். முதல்ல என்னை பத்தி தவறா தான் புரிஞ்சிகிட்டு இருந்தாங்க. அவர் என்னை புரிஞ்சிக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இதுதான் நீங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்னு அவர் சொல்லும்போது மகிழ்ச்சியா இருந்துச்சு. எனக்கு அது வேணும்னா எப்படியாவது அதை எடுத்துடுவேன்- அப்படியான நபர் அவர். நம்ம ஆள ரூல்ஸ் ராமானுஜன் அப்டின்னும் சொல்லலாம். எல்லாமே கலந்த ஒரு மனுஷன்" என சிரித்துக்கொண்டே பேசுகிறார்.

Also Read | GP முத்துவின் சர்ப்ரைஸ் எண்ட்ரி .. வந்த உடனேயே பிக்பாஸ் கொடுத்த ஷாக்..

தொடர்புடைய இணைப்புகள்

Rachitha Talk Vikraman and his performance in Biggboss

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Rachitha, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.