தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்கு முன்பு ஒளிபரப்பான 5 சீசன்களைப் போலவே இந்த சீசனும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
Also Read | "இனிமே சிவாங்கி செஃப் போல?".. புது கெட்அப்பில் வந்த கோமாளி?.. குஷியான குக் வித் கோமாளி செட்
அதே போல, 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் முதலில் களமிறங்கியிருந்த நிலையில் ஷிவின், அசிம் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேர் ஃபினாலேவுக்கு முன்னேறி இருந்தனர். இதில் அசிம் வெற்றி பெற்றதாக கமல்ஹாசன் அறிவிக்க இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து அனைவரும் தற்போது வெளியேறி உள்ள ஷிவினுக்கு சர்ப்ரைஸான வரவேற்பு ஒன்றை கொடுத்துள்ளார் நடிகை ரச்சிதா.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஷிவின் மற்றும் ரச்சிதா ஆகியோர் மிகச் சிறந்த நண்பர்களாக பழகி வந்தனர். ரச்சிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போது கூட அவரை கட்டியணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு சில நிமிடங்கள் அழுது கொண்டே இருந்தார் ஷிவின்.
அது மட்டுமில்லாமல், ரச்சிதாவின் தாயார் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த போது ஷிவினை தனது இன்னொரு மகள் என குறிப்பிட்டிருந்தார். இப்படி பல தருணங்களில் ஷிவின் மற்றும் ரச்சிதா ஆகியோரின் நட்பு பலரையும் மனமுருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது. அதேபோல, பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பிறகும் ஷிவினுடன் நட்பை தொடர்வேன் என்றும் ரச்சிதா கூறி இருந்தார்.
அதனை மெய்யாக்கும் வகையில் ஒரு விஷயத்தை தான் ரச்சிதாவும் தற்போது செய்துள்ளார். பிக் பாஸ் 6 ஆவது சீசனின் இரண்டாவது ரன்னர் அப்பாக ஷிவின் தேர்வாகி இருந்தார். இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து தற்போது வெளியேறி உள்ள நிலையில் அவருக்கு மிகவும் சர்ப்ரைஸான வரவேற்பு ஒன்றை கொடுத்துள்ளார் நடிகை ரச்சிதா.
ஷிவினுக்கு பெரிய அளவில் மாலை ஒன்றை போட்டு, அவருக்கு கேக் வெட்டி பல இடங்களில் பேனர்கள் வைத்து அவரை காரில் உற்சாகமாக கூட்டிச் சென்று ஷிவினை கொண்டாடியுள்ளார் ரச்சிதா. இது தொடர்பான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ரச்சிதா, என்னுடைய பாப்பாவை பெருமைப்படுத்தவும் சந்தோஷப்படுத்துவதற்கான ஒரு சிறிய முயற்சி தான் இது எனக் குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காணும் பலரும் ரச்சிதாவுடைய மனதையும், அவருக்கும் ஷிவினுக்கும் இடையேயுள்ள நட்பையும் பாராட்டி பலவிதமான கருத்துகளையும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | "நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்".. Bigg Boss- க்கு பின் அசிம் வெளியிட்ட முதல் வீடியோ!!..