பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவின் கணேசன் குறித்து ரச்சிதா பதிவிட்டுள்ளார்.

Also Read | "ட்ரீட் தரேன்..சம்பளம் எப்போ வரும்னு தெரியாது".. BIGGBOSS-க்கு பிறகு மைனா பகிர்ந்த வைரல் VIDEO!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ், நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, ஈழத்தை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட 3 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர்.
சமீபத்தில் நடந்த இறுதி போட்டியில் முதல் நபராக ஷிவின் எலிமினேட் ஆனார். பின்னர் விக்ரமன் & அசீம் இடையே ஒருவர் பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அசீம் இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசனால் அசீம் அறிவிக்கப்பட்டார். அசீம்க்கு பரிசாக மாருதி சுசூகி பிரேஸா காரும், 50 லட்ச ரூபாய் காசோலை, வெற்றிக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "என் பாப்பாவை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்க ஒரு சிறிய முயற்சி. இதற்கு ஷிவின் மிகவும் தகுதியானவர். மக்களின் வெற்றியாளர் ஷிவினை வரவேற்கிறோம்" என ரச்சிதா பதிவிட்டுள்ளார். மேலும் ஷிவினின் வரவேற்பு தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். ஷிவின் & ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இறுதிப்போட்டி அன்று கூட இந்த நட்பு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Also Read | Pathaan: பதான் படம் குறித்து ஷாருக்கானை வாழ்த்திய 'ஹேராம்' கமல்ஹாசன்..!