ஷிவினுடன் ஷீரடி சாய் பாபா கோவில் போன ரச்சிதா.. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன், வெற்றிகரமான சீசனாகவும் மாறி இருந்தது.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இதற்கு முந்தைய சீசன்களைப் போலவே ஆறாவது சீசனும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை. பெற்றிருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி இருந்த போட்டியாளர்கள் தான்.

மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த சூழலில் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் இல்லாதவர்கள் கூட இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து பட்டையை கிளப்பி இருந்தனர். ஷிவின், தனலட்சுமி உள்ளிட்ட பலரும் மக்கள் மத்தியில் பரவலாக பிக்பாஸ் மூலம் அறியப்பட்ட சூழலில் இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாக சென்றிருந்தது.

பிக் பாஸ் சீசன் 6

சுமார் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக அசிம் அறிவிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தார். இந்த நிகழ்ச்சி முழுக்கவே அசத்தலாக சண்டைகளுடனும், கலகலப்பாகவும், எமோஷனல் நிறைந்தும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் சென்றதால், பலரின் பேவரைட் சீசனாகவும் மாறி இருந்தது. அதேபோல பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த முறை 24 மணி நேரமும் கண்டுகளிக்கக் கூடிய வசதியும்  டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் இருந்தது.

Images are subject to © copyright to their respective owners

இந்த நிகழ்ச்சியில் ஷிவின் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தாலும், மிக முக்கியமான போட்டியாளர்கள் என்றும் மக்கள் மத்தியில் அறியப்பட்டிருந்தார். மேலும் தான் பிரபலமாக இல்லாத ஒருவராக இருந்தும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து தனது திறமையால் பலரையும் கவர்ந்து எடுத்த ஷிவின், தனக்கென ஒரு இடத்தையும் இந்த நிகழ்ச்சி மூலம் பிடித்துக் கொண்டார்.

ரச்சிதா - ஷிவின்

அதேபோல பிக் பாஸ் வீட்டில் ஷிவின் இருந்த போது அவருக்கு நெருங்கிய தோழியாகவும், உடன்பிறந்த சகோதரி போலவும் அன்பு காட்டி இருந்தார் பிரபல சீரியல் நடிகை ரச்சிதா. பிக் பாஸ் வீட்டில் இருந்து ஃபினாலே முடித்து விட்டு வெளியே வந்த ஷிவினுக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பையும் ரச்சிதா கொடுத்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners

இதனைத் தொடர்ந்து, பல இடங்களில் ரச்சிதா மற்றும் ஷிவின் ஆகியோரும் சுற்றித் திரிந்தும் வருகின்றனர். சமீபத்தில் ரச்சிதாவின் வீட்டிற்கும் ஷிவின் சென்றிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் ஷீரடி சாய் பாபா கோயிலுக்கும் சென்றுள்ளனர். இது தொடர்பாக பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரச்சிதா மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் தங்களின் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners

மேலும் ரச்சிதா தனது இன்ஸ்டா பதிவில், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Rachitha Mahalakshmi and shivin visited shirdi sai baba temple

People looking for online information on Bigg boss, Rachitha Mahalakshmi, Shivin will find this news story useful.