ஷிவின் பத்தி அமுது - விக்ரம் பேசும்போது.. டக்குன்னு கோபப்பட்ட ரச்சிதா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Rachitha got angry while amudhu and vikraman talks about shivin
Advertising
>
Advertising

Also Read | ரச்சிதா - அசீம் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. பரபரப்பான ஹவுஸ்மேட்ஸ்..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Rachitha got angry while amudhu and vikraman talks about shivin

இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகைபுரிந்திருந்தனர். இதே போல, ADKவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். இப்படி பிக்பாஸ் வீடு கலகலப்புடனும் நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் நிறைந்துகொண்டிருக்கின்றது.

இந்நிலையில், கார்டன் பகுதியில் விக்ரமன், அமுதவாணன் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். ஷிவின் இவர்கள் இருவருக்கும் உணவு பரிமாறுகிறார். அப்போது விக்ரமன்,"இரண்டாவது தடவை பரிமாறும்போது கொஞ்சமா வைக்கணும். என்னங்க இவ்வளவு வச்சுட்டீங்க" என ஷிவினிடம் கேட்கிறார். அமுதவாணனும் ஷிவினிடம் தனக்கு வைக்கப்பட்ட பொங்கல் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்.

அதற்கு,"உங்களுக்கு சாப்பாடு போட்டு வந்து கொடுக்குறதே பெருசு. வீட்ல பேப்பர் படிச்சுட்டே அப்பா எல்லாம் ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்கல்ல அந்த மாதிரி ரெண்டுபேரும் பண்றிங்க" என்கிறார். உடனே, "நியாயத்தை சொன்னா பெருசு, பழம்-னு திட்டுறாங்க, இப்படித்தான் அவங்களுக்கு பட்டம் கொடுக்குறாங்க" என கலகலப்பாக அமுது சொல்கிறார்.

இதனை கேட்டு சிரிக்கும் விக்ரமன்,"என்ன உங்க பொண்ண இப்படி வளர்த்திருக்கீங்க?" என்கிறார். இதற்கு பதில் சொல்லிய அமுது,"ஆளை வளர்த்தேன், முடியை வளர்த்தேன், அத நல்லா வளர்க்காம போய்ட்டேங்க. அவங்கப்பா என் கையில கொடுத்துட்டு போய்ட்டாரு. அதுல இருந்து நான்தான் பாத்துட்டு இருக்கேன். காலகாலத்துல இந்தப்பொண்ணுக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டேன்னா என்னோட கடமை முடிஞ்சிடும்பா" என்கிறார்.

அப்போது அருகில் அமர்ந்திருக்கும் ரச்சிதா,"அந்த வார்த்தையை மட்டும் சொல்லாத, கடுப்பாயிடும் எனக்கு" என்கிறார். அந்த வேளையில் குறுக்கிடும் விக்ரமன்,"ஏன்?, அவரு சித்தப்பாங்க.. அந்த பொண்ணுக்கு" என்கிறார்.

 

Also Read | விக்ரமனை கட்டியணைத்து அசிம் நண்பர் சொன்ன விஷயம்.. உடனே அமுது பண்ணத பாக்கணுமே!!

தொடர்புடைய இணைப்புகள்

Rachitha got angry while amudhu and vikraman talks about shivin

People looking for online information on Amudhavanan, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Rachitha will find this news story useful.