RACHITHA : அம்மாவ பார்த்ததும் உணர்ச்சி பொங்க அழுத ரச்சிதா.. கலங்கவைத்த BIGG BOSS ப்ரோமோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. சுமார் 70 நாட்களை இந்த நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், இனி வரும் நாட்கள் அனைத்து போட்டியாளர்கள் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அனைவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். இதில், பிரபல சீரியல் நடிகையான ரச்சிதாவும் கலந்து கொண்டுள்ளார்.

Rachitha cries when her mother enters into bigg boss house
Advertising
>
Advertising

Also Read | தனா வெளிய போனதும் பாதிச்ச விஷயம்.. முதல் முறையாக ஷிவின் உடைத்த சீக்ரெட்!!.. அட, ஆமால்ல!!

ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய ஸ்டைலில் ஆடி வரும் ரச்சிதாவுக்கு நிறைய ரசிகர்களும் உள்ளனர். இந்த நிலையில், ரச்சிதாவின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் வரும்போது ரச்சிதா ஃப்ரீஸ் ஆகி இருந்தார். அம்மா வருவதை அறிந்து திரும்பி பார்த்தவர் உணர்ச்சிவசப்பட்டு அழச் செய்தார்.

Rachitha cries when her mother enters into bigg boss house

முன்னதாக தன் அம்மா பற்றி பிக்பாஸ் வீட்டில் கூறியிருந்த ரச்சிதா, அம்மா இப்போது வரை தன் மீது வைத்த நம்பிக்கை குறித்தும் பல்வேறு உருக்கமான கருத்துக்களை பேசியதுடன் தான் உயிர் இருக்கும் வரை அம்மாவை சிறந்த முறையில் பார்த்துக் கொள்ளவுள்ளதாக என தெரிவித்திருந்தார்.

அதே போல கடித டாஸ்க்கில் தனது அம்மாவுக்கு கடிதம் எழுதி அதனை படிக்கும் ரச்சிதா, "அந்த கடவுள் கிட்ட கேட்டுக்கிறது ஒண்ணே ஒண்ணு தான். எனக்கு இதுக்கப்புறம் என் வாழ்க்கையில் என்ன நடக்கும்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. குழந்தையோட அமைப்பு இருக்கான்னும் எனக்கு தெரியாது. 

என் அம்மா தான் எனக்கு குழந்தை. அந்த கடவுள் அந்த குழந்தையை என்கூட கடைசி வரைக்கும் கொடுக்கணும். அந்த குழந்தையை நல்லபடியா நான் பாத்துக்கணும். அது மட்டும் நான் கேட்டுக்குறேன்.

என்னோட வாழ்க்கைன்னா அது அம்மா தான். நான் இங்க நிக்கறதுக்கு முழு காரணமும் அவங்க மட்டும் தான். என் திறமைக்கு அவங்க ஆதரவா இருந்தாங்க. கிட்ட இருக்கும் போது அவங்க அருமை புரியல.

தெரிய ஆரம்பிக்குறப்போ பிக் பாஸ் வாய்ப்பு வந்துடுச்சு. இதுக்கப்புறம் எனக்கு நீ, உனக்கு நான்னு வாழுறதுக்கு ரெடியா இருக்கேன் அம்மா” என கண்ணீர் மல்க பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "ஆவேசமா பேசுன விஷயத்த அமுதவாணன் பையன் இப்டி Fun பண்ணிட்டாரே".. விக்ரமன் குடுத்த Reaction!!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rachitha cries when her mother enters into bigg boss house

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Rachitha, Rachitha amma will find this news story useful.