“நீங்களே போக வெச்சிடுவீங்க போலயே?”.. வதந்திகளுக்கு பதிலடி.. ரச்சிதா ராக்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக பிரபலமானவர் ரச்சிதா.

தற்போது, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீசன்-2 தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அண்மைக் காலமாகவே விறுவிறுப்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன. எனினும் ரச்சிதாவை சில காட்சிகளில் ரசிகர்கள் காண முடியாததால் ரச்சிதா சீரியலை விட்டு வெளியேறிவிட்டாரா? என்றெல்லாம் கேட்டு வருகின்றனர்.

இதனிடையே ஒரு கன்னட திரைப்படத்தில் நடிப்பதற்கு ரச்சிதா ஒப்பந்தமானார். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன.

அந்த கன்னட திரைப்படத்தில் நடிப்பதற்காக ரச்சிதா முழுநேர திரைப்பட நடிகையாக பிஸியானதால்தான் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டாரா? என்றெல்லாம் கூட பேச்சுகள் எழுந்தன.

இநத நிலையில்தான் ரச்சிதா தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் பதிவிட்டிருக்கிறார். சரவணன் மீனாட்சி சீரியல் படப்பிடிப்பு நடத்திய வீட்டில் நாம் இருவர் நமக்கு இருவர் ஷூட்டிங் நடந்துள்ளது.

அந்த படப்பிடிப்பின் புகைப்படங்களை இந்த போஸ்டில் பகிர்ந்துள்ள ரச்சிதா, “அதே தூண்.. அதே மாடி.. அதே கதவு.. அதே வீடு.. ஆஹா மறுபடியுமா?” என பதிவிட்டுள்ளதுடன்,  “நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இருந்து நான் விலகிவிட்டேன் என சில வதந்திகளை வைத்து அர்த்தம் புரிந்துகொள்ளாதீர்கள்.

Also Read: வீட்ல விசேஷம் தான்!! விரைவில் அம்மாவாக போகும் ரசிகர்களின் முன்னணி favourite சீரியல் நடிகைகள்!

So போற வரைக்கும் போவோம். தானா stop ஆச்சுனா பாத்துக்கலாம்.  So அதுவரைக்கும் என்ன கொஞ்சம் free-ஆ விடுங்க.. விட்டு போறாங்க போறாங்கனு சொல்லி சொல்லி நீங்களே போக வெச்சிடுவீங்க போலயே.. நமக்கு அடி ஒன்னும் புதுசு இல்லயே.. பாத்துக்கலாம் என்ன நடந்தாலும்” என தெரிவித்துள்ளார்.

“நீங்களே போக வெச்சிடுவீங்க போலயே?”.. வதந்திகளுக்கு பதிலடி.. ரச்சிதா ராக்ஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rachitha clarifies NINI Serial quit rumours சீரியல் நடிகை ரச்சிதா

People looking for online information on NamIruvarNamakkuIruvar, Rachitha Mahalakshmi, SerialActress, TVActress, TVSerial, VijayTelevision will find this news story useful.